''தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்;

அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக்   கடந்துபோவார்கள்...."            

  மீகா 2:13                                                                                                                    

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

       கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

          ஒரு பயணத்தின்போது மிகவும் களைப்படைந்தேன்.காலையில் 4:30மணிக்கு விமானநிலையம் சென்றேன். சரியான நேரத்தில் விமானம் புறப்பட்டது.முதலில் சென்ற ஊரில் குறுகிய நேரத்திலேயே விமானம் மாறி அடுத்த ஊருக்குச் சென்றேன் . இதற்குப் பயண தூரம் அதிகமாய் இருந்ததால் விமானம் மாறவேண்டி விமனநிலையத்திற்கு மாலை 6:30மணிக்கு வந்தடைந்தேன். எனது ஊருக்குச் செல்ல வேண்டிய கடைசி பயணம் ஒருமணி நேரத்தில் தொடங்கியது .விமானத்தில் ஏறி விமானம் ஓடும் பதைக்குச் சென்று ஓட ஆரம்பித்தது. விமானம் முழுமையாக விண்ணில் பறக்கவேண்டிய நேரத்தில் தீடிர் என ஒரு பெரிய சத்தம் உண்டானது. விமான டயர் உடைந்திருக்கும் என எண்ணினேன். மீண்டும் அதே விமானநிலையம் வந்தடைந்தபோது, விமான ஓட்டி இஞ்சின் பழுதாகிவிட்டது என்றார். பசி களைப்பு அதிகமாக இருந்தது. அடுத்து 3 மணிநேரம் கழித்துதான் என்ற அறிவிப்பு கேட்டபோது, கர்த்தாவே எனக்கு இரங்கும், நீர் முன்னால் சென்றால் தடைகள் நீங்கிவிடும் என்று ஜெபித்தபோது , கர்த்தர் கிருபைச் செய்தார். அடுத்த விமானம் 30 நிமிடத்தில் கிடைத்தபடியால் சற்று முன்னதாகவே வீடு சென்றடைந்தேன்.

            தடைகளை நீக்கிப்போடுகிறவர் நமக்கு இருக்கிறார். அவர் நம் வாழ்வில் உள்ள எல்லாத் தடைகளையும், தாமதங்களையும் அகற்றி நம் காரியங்களை கூடிவரச் செய்வார். திருமணமானாலும் பிள்ளைபேறானாலும், வேலையானாலும், அதில் உயர்வானாலும், விற்க, வாங்க வேண்டிய தானாலும், கட்டவேண்டியதானாலும் சகலத்தையும் அதனதின் காலத்தில் கர்த்தர் நேர்த்தியாய்ச் செய்து நம்மை ஆசீர்வதிப்பார். தடைகளை நீக்கிப் போடுகிற கர்த்தரை நமக்கு முன்பாக வைப்போம். எல்லாத் தடைகளும் நீக்கப்பட்டு ஆசீர்வாதம் பெறுவோம்.

                                                       கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.                       

                                                                                                                                                                                                                               சகோ. எபினேசர் பால்.