பலவிதமான சரீர வேதனைகள் நீங்கி சுகமடைய ஒரு ஜெபம்

அன்பின் தேவனே, இந்த ஜெப நேரத்திற்காக உமக்கு மிகுந்த நன்றி கூறி ஸ்தோத்தரிக்கிறேன். கர்த்தாவே, இம்மட்டும் நீர் என்னையும் / என் வீட்டாரையும் கிருபையாய் சுகமாய்க் காத்து வருகிற படியால் உமக்குத் துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன். ஆனாலும் சிற்சில நேரத்தில் என் தலையில் உண்டாகும் / என் மனைவியின் தலையில் / என் கணவரின் தலையில் / என் பிள்ளையின் தலையில் உண்டாகும் வலியும் வேதனையும் அதிகப் பாடுகளையும், துன்பத்தையும் உண்டாக்குகிறது. என்ன செய்வது என்று தவிக்கிறேன். மருத்துவரை அனுகின போது ஒன்றும் இல்லை என்று சொல்லி சாதாரண வைட்டமின் மாத்திரையைக் கொடுத்து ஓய்வு எடுக்கச் சொல்கிறார்கள். நீர் ஒருவரே என் வேதனை நீங்கி சுகமாயிருக்கச் செய்கிறவர். எனக்கு இன்றே இரங்கும். சில நேரம் இந்தப் பாடுகளை நான் சுமக்க வேண்டுமோ என்ற கேள்வியின் எண்ணம் வருகிறது. என்னால் இதனைத் தாங்கமுடியாத தால், பலவிதமான எனக்குத் தெரிந்த மருந்துகளைச் சாப்பிடுகிறேன். கர்த்தாவே, நீர் எனக்கு தயவாய் இரங்கி, என் வேதனை நீங்கச் செய்யும். இதைப் போல சில சமயங்களில் என் சரீரத்திலும் / என் மனைவியின் சரீரத்திலும் / என் கணவரின் சரீரத்திலும் / என் பிள்ளையின் சரீரத்திலும் வேதனையான வலி வருகிறது. எத்தனைக் காலம் இந்த வேதனையைச் சகிப்பது என்ற கவலை என் உள்ளத்தைத் துக்கப்படுத்துகிறது. எனக்கு இரங்கும். கர்த்தாவே, எனக்கு இரங்கும். இந்த வேதனையான வலி என்னை விட்டு முற்றிலும் நீங்கச் செய்யும். நீர் என் நோய்களைச் சுமந்து தீர்த்துவிட்ட படியால், நான் பூரண சுகத்துடன் வாழ எனக்கு உதவிச் செய்யும். தயவாய் உமது வசனத்தை எனக்கு அனுப்பி என்னைக் குணமாக்கும். நான் என் வேதனை நீங்கி சுகமாய், சமாதானமாய்க் காரியங்களைச் செய்ய மிகுதியாக விரும்பி வேண்டுகிறேன். என் விசுவாசம் குறைவு படாதபடி, எனக்கு இன்றே இப்பொழுதே அற்புத சுகத்தைத் தாரும். உம் தழும்புகளால் குணமாகிறோம் என்ற வாக்கு நிறைவேறட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.