சிந்தி செயல்படு

"...இனி நீ அழுது கொண்டிராய்உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கிஅதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்."

ஏசாயா 30:19

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

ஒருமுறை ஒரு constructing கம்பெனி வைத்திருக்கிற ஒருவர் ஜெபிக்க வந்தார். சுமார் 30 ஆட்களுக்கு எந்த வேலையும் இல்லாத படியினால் சம்பளம் வீணாய்க் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். நஷ்டத்தின் மேல் நஷ்டம் என்று ஜெபிக்க வந்தார். எப்பொழுதும் தேவனைத் துதித்துப் பாடிக்கொண்டிருக்கும் சகோதரன். அவரோடு இணைந்து ஜெபிக்கும்போது சில வருடங்களுக்குரிய ஒரு பெரிய construction contract -ஐ கர்த்தர் உங்களுக்குத் தருகிறார். அதற்குரிய தகவலை ஒரு brown நிறக் கவரில் வருகிறதைப் பார்க்கிறேன் என்று கூறினேன். அதைப் போல 10 தினங்களிலேயே தெற்கு கப்பற்படை சார்ந்த கட்டடத்தைக் கட்டுவதற்குறிய ஆர்டர் வந்தது. அவருக்கு மிகுந்த சந்தோஷம். அந்த ஆர்டர் கிடைத்த நாளிலே என்னைச் சந்திக்க வந்தார். அவருடைய 2 பெண் பிள்ளைகள் மருத்துவப்பிரிவில் படித்துக் கொண்டிருந்தார்கள். மகன் ஹாஸ்டலில் தங்கி Eng. College படித்துக் கொண்டிருந்தான். அவருக்குள் பிள்ளைகளைக் குறித்தது கவலை உண்டாகிறது என்றார். அவரை உடனே மகன் இருக்கிற இடத்திற்கு போகும்படி கர்த்தருடைய ஆவியானவர் நடத்தினார். விரைவிலேயே சென்றார். மகனோ குடித்து நிறைந்த போதையில் இருந்தார். கர்த்தர் அவனை அந்நாளிலே தொடவும் மாற்றுவதற்கும் கிரியைச் செய்தார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, உங்கள் வாழ்க்கையில் உள்ள குறைவுகளினாலே கண்ணீர் சிந்துவீர்களானால் உங்களுக்கும் கர்த்தருக்கு உள்ள உறவைச் சீர்ப்படுத்துங்கள் அவரைத் துதித்து ஜெபியுங்கள். அவர் அதிசயமாய் நடத்துவார். உன் கண்ணீரைக் கண்டேன் என்று எசேக்கியாவின் ஜெபத்திற்கு பதில் தந்தவர் மாறாதவராய் இருக்கிறார். கண்ணீரைத் காண்கிறவர் மாத்திரமல்ல, எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைக்கிறவராய் இருக்கிறார். உங்கள் கவலைகள், பிள்ளைகளின் நிமித்தம் உண்டாகும் கவலைகள், வேதனைகள், அதினால் என்ன செய்வது என்று அழுது கொண்டிருக்கிற தேவப்பிள்ளையே, இனி அழுது கொண்டிராதிருக்க கர்த்தர் உனக்கு உதவி செய்கிறவராய் இருக்கிறார். துதியினாலும் ஜெபத்தினாலும் கர்த்தருக்குள் உள்ள உறவை புதிதாக்கு, உன் பிள்ளைகளின் சமாதானம் பெரிதாயிருக்கும் என்றவர், உன் கண்ணீரைத் துடைப்பார், கலங்காதே.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

சகோ. C. எபனேசர் பால்.