வேலை ஸ்தலத்தில் உண்டாகும் பிரச்சனைகள் நீங்கி சமாதானத்துடன் பணி செய்ய ஒரு ஜெபம்

அன்பின் தேவனே, இந்த நல்ல ஜெப நேரத்திற்காக நன்றி கூறி உம்மைத் துதிக்கிறேன். அநேகருக்கு இல்லாத விதத்தில் கிருபையாய் எனக்கு இந்த வேலையைக் கொடுத்தீர். அதற்காக ஸ்தோத்திரம். இந்த வேலையை நலமாய் செய்ய உள்ளத்தில் மிகுதியாக விரும்பி செய்ய ஆரம்பித்த எனக்கு பலவித நிந்தை உண்டாகிறது. என் உடன் வேலை செய்கிறவர்களின் வார்த்தையை நம்பி என்னை பகைக்கிறார்கள். என்னுடன் வேலை செய்பவர்கள் சமாதானமாய் வேலை செய்யாமல் பொறாமையுடன் எனக்குப் போட்டியாக செயல்படுகிறார்கள். தாங்கள் செய்த காரியங்களில் தவறு ஏற்பட்டால் நான் செய்யவில்லை, அவன்/ அவள் தான் செய்தாள் என்று குற்றத்தை என் மீது சுமத்துகிறார்கள். சரியாக, சிறப்பாக நான் செய்த காரியங்களை, தான் செய்தது என்று சொல்லி எனக்கு பெயர் வரத் தடை செய்கிறார்கள். அன்பின் தேவனே, சில சமயத்தில் வேலைக்கு செல்லவே பிடிக்கவில்லை. எனக்கு இரங்கும் இயேசு கிறிஸ்துவே. லாபான் யாக்கோபின் சம்பளத்தை மாற்றியமைத்தது போல என் வேலை ஸ்தலத்திலும் அதிக அதிகமாய் சம்பளத்தைக் குறைத்து தடுக்கிறார்கள். கர்த்தாவே எனக்கு இரங்கும். உன் மூலமாய் என் எல்லைகள் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள், கம்பெனி சொந்தக்காரர்கள் சொல்லத்தக்கதாக என் வேலையை ஆசீர்வதியும். சில சமயங்களில் வேறு இடத்திற்கு வேலைக்காக மனு செய்யலாமா? என்ற எண்ணமும் வருகிறது. கர்த்தாவே, எனக்கு இரங்கும். என் கையின் பிரயாசங்களையும் நான் செய்யம் வேலையையும் ஆசீர்வதியும். தானியேலைப்போல என் வேலையில் ஒருவரும் குறை காணமுடியாதபடி என் வேலையை நான் உமக்குள் செய்ய உதவிச் செய்யும். நான் உண்மையாய் வேலைச்செய்ய எனக்குப் போதுமான சுகத்தையும், பெலனையும், ஞானத்தையும் தாரும் கர்த்தாவே. உம்முடைய ஊழியத்தை வேலையாக செய்கிற எனக்கு உற்சாகத்தையும், உமது அன்பையும், நீர் விரும்புகிற பரிசுத்தத்தையும் தாரும். அன்பின் ஆண்டவராகிய இயேசுவே, உமது நாமம் உயர்த்தப்பட உமது சித்தப்படி என்னை நடத்தும். இன்று நான் செய்கிற வேலையை ஆசீர்வதியும். நான் செய்கிற ஊழியத்தை ஆசீர்வதியும். இயேசு கிறிஸ்துவின் மூலம் வேண்டும்கிறேன் நல்ல பிதாவே. ஆமென்.