பிள்ளைகளின் திருமண காரியங்களில் உள்ள தடைகள் நீங்க ஒரு ஜெபம்

அன்பின் இயேசு கிறிஸ்துவே, இந்த நல்ல ஜெபவேளைக்காக உம்மைத் துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். இம்மட்டுமாக என்னை நடத்தின தேவனே, உமக்கு மிகுந்த ஸ்தோத்திரம். என் வாழ்வில் நீர் செய்த ஒவ்வொரு நன்மைக்காக உம்மை அதிகமாக நேசித்து துதிக்கிறேன். கர்த்தாவே, என் தாயின் கருவில் உருவானதுமுதல் என்னைக் காத்தீர்; சுகபத்திரமாய் பிறக்கவும், வளரவும், படிக்கவும் எனக்கு தயவு செய்தீரே உமக்கு ஸ்தோத்திரம். நீர் எனக்குக் கொடுத்த அன்பான பெற்றோருக்காகவும் ஸ்தோத்திரம். என் தடைபட்ட திருமண காரியத்தைக் கூடிவரச்செய்தீர். அதற்காக ஸ்தோத்திரம். தாமதமின்றி கர்ப்பத்தின் கனிகள் கொடுத்தீர். அதோடு அவர்கள் சுகமாய் வாழ வழி நடத்தினீர். நல்லப் படிப்பையும் கட்டளையிட்டு, முடிக்கவும் உதவினீரே, உமக்கு ஸ்தோத்திரம். இப்பொழுதும் கர்த்தாவே அவர்களின் திருமணவாழ்வுக்காக உமது சமுகத்தில் என்னைத் தாழ்த்தி வேண்டுகிறேன். ஏற்கெனவே ஒரு வரன் வந்ததை அறிவீர். அது ஏனோ தடையாகிவிட்டது. உமது சமுகத்தில் வேண்டுகிற என் ஜெபத்திற்குத் துரிதமாய் பதில் தாரும். தாமதத்தினால் சில வேளைகளில் கசப்பான வார்த்தைகளை நான் கேட்க வேண்டிவருகிறது. ஜெபத்தைக் கேட்கிற அன்பின் தேவனே, என் ஜெபத்தை தயவாய் இன்று இப்பொழுதே கேட்டு, மகளுக்கும், மகனுக்கும் நல்ல வரன் கொண்டு வாரும். இனியும் தாமதிக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவே, எனக்கு இரங்கும். ஒரு விசை என் ஜெபத்தைக் கேட்டு பதில் தாரும். சமாதானமும், சந்தோஷமும் எனக்குப் பெருகச் செய்யும். என் வாழ்வில் நீர் செய்த காரியத்தை மறவாது துதிக்கிறேன். அதிசயம் செய்யும் இயேசு கிறிஸ்துவே, இன்றே செய்து என்னை மகிழப்பண்ணும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டுகிறேன் நல்ல பிதாவே. ஆமென்.