"உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்துஅவர்மேல் நம்பிக்கையாயிரு,

                                     அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்."

                                                                            சங்கீதம் 37:5

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்,

ஒருமுறை தமிழ் மொழி பேசாத இடத்தில் கூட்டத்தை நடத்தினோம். சில வாலிபர்கள் அக்கூட்டத்தைக் கண்டு அற்பமாக அலட்சியப்படுத்தி, கேலி செய்து கொண்டு இருந்தனர். கூட்டத்தின் இறுதி ஜெப நேரத்தில் ஒரு பெண்ணில் உள்ள சர்ப்பத்தின் ஆவி அந்த மகளை அலைக்கழித்தது. பாம்பு மாதிரியே தரையில் தலையை மாத்திரம் தூக்கிக் கொண்டு ஊர்ந்து மேடைக்கு வந்தார்கள். ஜெபித்தபோது விடுதலை உண்டானது. இதனைக் கண்ட ஒரு வாலிபன் அந்த கேலி செய்துகொண்டிருந்த கூட்டத்தில் இருந்து எழுந்து வந்து தனக்கு ஜெபிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். முழங்கால் படியிட்டு இருந்த மகனைப் பார்த்து நீ ஒரு பகுதி இடத்தில் டாக்டர் என்ற போர்டை வைத்து பணம் சம்பாதிக்க திட்டமிட்டு இருக்கிறாய். இதைச் செய்யாதே. எந்த மருத்துவ சம்பந்தமான படிப்பையும் படிக்காதவன், வாழ்க்கை போராட்டமாகி விடும்.  ஜெயிலில் உன் நாட்களைச்  செலவிட வேண்டியதாகும், என்றவுடன் தான் அவ்வாறு சம்பாதிக்க திட்டமிட்டுள்ளேன் என்று கூறினான். அவ்வாறு செய்யாது, அன்றே  கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து புதுவாழ்வு வாழ அர்பணித்தான்.

அன்பின் தேவப்பில்லையே, பணம் சம்பாதிக்க நான் திட்டமிட்டுள்ளேன். அது குறுக்கு வழி . அது பிழையுடையது என்று கர்த்தர் உனக்கு இன்று உணர்த்தி, அதைச் செய்யாது உன்னைக் காக்க விரும்புகிறார். கர்த்தரின் வழி  நடக்க இடம் கொடுப்போம். குறைகளை நீக்கி கர்த்தர் நம்மை ஆசீர்வதித்து தரும்படி அவரைத் தேடுவோமாக, தாழ்த்துவோமாக. அவர் வழி எல்லா வலிகளையும் விட மேலானது. அது முழுமையானது, ஆசீர்வாதமானது, குறைவில்லாதது.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

சகோ. எபனேசர் பால்.