'' இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்.''

                                                                                                                                1 தெசலோ. 5:17

 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

      கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

      ஒருமுறை இலங்கை தேசத்தில் சண்டை மிகுதியாய் நடைபெற்றுக் கொண்டிருந்த இடங்களில் ஊழியங்களைச் செய்ய சென்றோம். நாங்கள் அந்நாட்களில் திருக்கோயிலூர் (பட்டிக்கலா ) என்ற ஊரில் தங்கினோம். அடுத்த தினம் காலையில் அக்காரப்பட்டு என்ற இடத்தில் இருந்த மெதடிஸ்ட் ஆலயத்தில் கர்த்தருடைய வார்த்தைகளை சொல்ல இருந்தேன். முந்தின தினம் இன்னொரு பகுதியில் கூட்டம்  முடிந்த இரவு நேரத்திலேயே, தங்கியிருந்த திருக்கோயிலுக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். காட்டு வழி குறுக்கு வழி  என்றதால் நேரத்தை எண்ணி அப்பாதையில் செல்ல ஆரம்பித்தோம். டிரைவர் சீட்டில் அருகில் அமர்ந்திருந்த நான் அடுத்த நாள் பேசுவதற்கு கர்த்தர் கொடுத்த வசனத்தை உள்ளத்தில் தியானித்து கொண்டே வந்தேன். திடீரென பாதையில் ஒரு மரக்கட்டையானது போடப்பட்டது. ஜன்னலின் அருகில் வாகனத்தில் உட்கார்ந்திருந்த அத்தனை பேர் தலையிலும் துப்பாக்கி வைக்கப்பட்டது. யார் நீங்கள்? என்கிற  சத்தத்தோடு பேசின வார்த்தைகள் எல்லோரையும் அதிர்ச்சியில் அமரச் செய்தது. அடுத்த நாளில் கர்த்தர் பேசுவதற்கு கொடுத்திருந்த விடுதலையினால் உண்டாகும் சமாதானத்தின் செய்தியை நான் தைரியமாக, கேள்வி கேட்ட மனிதனுக்கு இந்தியாவிலிருந்து சொல்ல வந்திருக்கிறோம் என்று சொன்னோம். அப்பொழுது என் தலையிலும் மற்ற்றவர்  தலையிலும் வைக்கப்பட்டிருந்த துபபாக்கியை எடுத்து விட்டார்கள். இவ்விதமாய் காரியங்கள் நடைபெறும் போது என் உள்ளத்தில் ஆழத்தில் இரங்கும் கர்த்தாவே என்று மிகுந்த தாழ்மையாக வேண்டுதல் செய்து கொண்டே இருந்தேன். துபாக்கியை எடுத்தவர்கள் ஏன் எங்களுக்கு அறிவிக்கவில்லை என்று கேள்வியைக் கேட்டு விட்டு தங்கள் வாகனத்தை எங்கள் வாகனத்திற்கு முன்பாக ஒட்டிச் சென்று நாங்கள் தங்கியிருந்த திருக்கோயிலூர் செல்லும் சாலையில் செல்ல வழிகாட்டினார்கள்.

       அருமையான சகோதரனே/சகோதரியே, இடைவிடாமல் ஜெபியுங்கள் என்ற கர்த்தரின் ஆலோசனை வார்த்தைகளுக்கு நாம்  இடம் கொடுத்து நம் ஆவிக்குரிய வாழ்க்கையில் சோதனை வரும்போது, பாடுகள் வரும்போது, அழிந்து விடாதிருக்க தைரியத்தை தந்து நம்மை அனுதினமும் நடத்துகிற  கர்த்தாதி கர்த்தர் இன்னும் ஜீவிக்கிறார். அவரின் சொல்படி இன்று முதல் இடைவிடாமல் உள்ளத்தின் ஆழத்தில் அவரின் வார்த்தைகளை தியானிப்போம். இடைவிடாமல் ஜெபிப்போம் .

            கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக

                           சகோ. C. எபனேசர் பால்.