"சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்...."
                                                                                                                                                                                          யோவான் 8:32

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை பாக்கியம் இல்லாத குடும்பத்தினருக்கு ஒரு முறை ஜெபிக்கச் சென்றேன். ஜெப வேளையின் போது அச்சகோதரியின் வயிற்றில் குறிப்பிட்ட மரத்தின் இலைகள் அரைக்கப்பட்டு உருண்டையாகக் கொடுக்கப்பட்டிருப் பதைக் கண்டேன். ஜெபவேளை முடிந்த பிறகு நீங்கள் என்ன இந்த மரத்தின் இலைகளைச் சாப்பிட்டிருக்கிறீர்களே என்று கேட்டபோது, அச்சகோதரி, எனக்கு ஒரு சகோதரி இதைக் கொடுத்தார்கள் என்று பதில் கூறினார்கள். இந்த இலையை நீங்கள் சாப்பிட்டால் கர்த்தர் நிச்சயம் கர்ப்பத்தின் கனியைத் தருவார் என்று சொன்னதால் அவ்வார்த்தைகளை நம்பி அவைகளைச் சாப்பிட்டேன் என்றார்கள்.

அருமையான தேவப்பிள்ளையே, வேத வாக்கியங்களின்படி செய்ய எல்லாவற்றையும் ஒப்புக்கொடுங்கள். என் வியாபாரம், என் தொழில் செய்யும் இடத்தில் சூனியங்கள் செய்யப்பட்டுள்ளது என்று பரிகாரமாக சொருபங்களுக்கும், சில சிலைகளுக்கும், வேறு விதமான தவறான காரியங்களுக்கும் இன்று அடிமையான மக்கள் ஏராளம் "கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருந்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்" என்ற வாக்கின்படியும், "நான் நம்புகிறவர் இன்னார் என்று அறிவேன்" என்ற வாக்கின்படியும் நாம் கவனமாக காரியங்களைச் செய்வோம். அவர் நமக்கு விடுதலைத் தந்து நம்மை ஆசீர்வதிப்பார். செம்மையாக உண்டாக்கப்பட்ட மனிதன் பல உபாயத்தந்திரங்களைத் தேடின படியால் பல பாடுகளையும், நெருக்கங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறான். இன்று நானே வழி, சத்தியம், ஜீவன் என்று சொன்ன கிறிஸ்துவை அறிகிற அறிவிலே வளர்ந்து ஆசீர்வதிக்கப்பட இடம் கொடுப்போம். துன்பத்தின் நடுவில் நாம் நடந்தாலும் "எனக்காக யாவும் செய்து முடிப்பார்" என்று சொன்ன தேவன், கல்வாரிச் சிலுவையில் நமக்காக எல்லாவற்றின்மீதும் வெற்றி சிறந்துள்ளபடியால் அவர் வழி நடக்க நம்மை அர்ப்பணித்து, ஆறுதலும் சுகமும் பெற்று வாழ நாம் கவனமாக இருப்போம்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

மறைந்த சகோ. C. எபனேசர் பால். (இது 1993 ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது)