"நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது ; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்."

                                                                                                                                                                                                        சங்கீதம் 119:71

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

என்னுடைய சிறு வயதிலே நான் Ice cream சாப்பிடாமல் இருந்தேன் என் தந்தை பல முறை எனக்கு இதைச் சாப்பிட சொல்லி வலியுறுத்தியும் நான் சாப்பிடவில்லை. ஒரு முறை நீ இதைச் சாப்பிட்டால் இதை மிகவும் விரும்பி தொடர்ந்து சாப்பிடுவாய் என்று சொன்னார். ஆனால் அது என் பார்வைக்கு விரும்புகிற வண்ணமாக இல்லை என்பதால் மறுத்து விட்டேன். என் தந்தை பல முறை வலியுறுத்தியும் நான் அதைச் சாப்பிடாததால் அவர் Ice cream வாங்கி வந்து, என்னுடைய இரண்டு சகோதார்களும், என்னுடைய கைகளையும், கால்களையும் பிடித்துக் கொண்டு இருக்க, என் தந்தை என் வாயில் Ice cream ஒரு spoon வைத்தார். உடனே அந்த Taste எனக்குப் பிடித்துவிட்டது. சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடித்த அந்த அழுகையும் நின்று விட்டது. இன்னும் நிறைய கொடுங்கள் என்று சாப்பிட ஆரம்பித்தேன்.

நம்முடைய உலக தகப்பன் சாதாரண இந்தக் காரியத்திற்கு நம்மேல் அக்கறை கொண்டு நமக்குச் செய்யும்போது, நம்முடைய பரம் தகப்பன் நம்மேல் எல்லையற்ற கரிசனை உள்ளவராய் எப்படியாகிலும் நாம் அவர் அன்பை ருசிக்க வேண்டும் என்று நம்மேல் நோக்கமாய் இருக்கிறார்."... அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய களம் உண்டாக்குகிறது. 2 கொரிந்தியர் 4:17 களமகிமையை

இந்த உபத்திரவம், இந்தப் பாடுகள், தீமைகள் நன்மைக்கே. நமக்கு அது உபத்திரவமாக, வமாக, தீமையாக தோன்றினாலும், கர்த்தர் அதை சமாதானமாக நன்மையாக முடியப் பண்ணுவார்.

"நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே' எரேமியா 29:11.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

சகோதரர் நத்தானியேல் பால்.