கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
தாவீது தன்னுடைய வாழ்க்கையில் துதிப்பது நலமானது, இன்பமானது என்று கூறுகிறார். சங்கீதம் 147:1ல் 'துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது' என்று தன்னுடைய அனுபவத்தின் மூலமாக தாவீது கூறுவதைக் காண்கிறோம். சங். 34:1ல் 4:1ல் 'கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன், அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும் என்று பார்க்கிறோம். இங்கு தேவனுடைய துதியைக் குறித்து மிகவும் மகிழ்ச்சியோடு சொல்லப்படுகிறதைப் பார்க்கிறோம். சங்கீதம் 136ல் கர்த்தர் செய்த நன்மையான காரியங்களுக்காக, அவருடைய வல்லமையின் செய்கைகளுக்காக, அவருடைய மகத்துவத்திற்காக துதிக்கவேண்டும் என்று சொல்லப்படுவதைப் பார்க்கிறோம். இன்றைக்குத் துதிப்பதும், தேவனை ஆராதிப்பதும் நம்மைப் பூரணப்படுத்துகிற ஒரு பகுதியாக இருக்கிறது. தேவனை ஆராதிக்கும் போது அவரைத் துதிப்பது, போற்றி புகழுகிற காரியமானது இனிமையானதாயிருக்கிறது. துதியில்லாதபடி தேவனை ஆராதிக்க முடியாது. கர்த்தரைத் துதிப்பதின் மூலமாக மனிதனுடைய வாழ்க்கையிலே பல வல்லமையான, ஆசீர்வாதமான, மேன்மையான காரியங்களைப் பெற்றுக் கொள்ளமுடியும். துதிப்பதின் முக்கியத்துவத்தைக் குறித்துப் பார்ப்போம்
1.துதியினால் விடுதலை:
"நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்." அப்போஸ்தலர் 16:25
இங்கு இரண்டு மனிதர்கள் தேவனைத் துதிப்பதைப் பார்க்கிறோம். அவர்களுடைய சூழ்நிலை என்ன? அவர்கள் ஏன் நடுராத்திரியில் துதித்தார்கள். இதை நாம் ஆராய்ந்து பார்ப்போம் அவர்கள் இருந்த இடமோ இருள் நிறைந்தது. இதற்கு முந்தின வசனங்களைப் பார்க்கும்போது (23ம் வசனத்திலிருந்து) அவர்களை அநேக அடிகள் அடித்து, சிறைச்சாலையில் வைத்து அவர்களைப் பத்திரமாகக் காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளையிட்டார்கள். அவர்கள் கால்கள் தொழுமரத்தில் மாட்டி வைக்கப் பட்டது என்று பார்க்கிறோம். அவர்கள் கால்கள் அசைக்கப்படாதபடி கட்டப்பட்ட ஒரு நிலைமை. அவர்கள் இருந்த இடமோ உட்காவலறை. உட்காவலறை என்றால் ஆங்கிலத்தில் Dungeon என்று பார்க்கிறோம். வெளி உலகத்திற்கும் உள்ளான நிலைக்கும் ஒன்றையும் அறிந்து கொள்ள முடியாத வேதனைக்குட்படுத்தப்பட்ட நிலையிலே சரீரத்தில் பாடுகளோடு, வேதனையோடு தேவனைத் துதிக்கிற ஒர் அனுபவத்திற்குள்ளாக இருந்ததைப் பார்க்கிறோம்.
இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலே எல்லாம் நன்றாக நடைபெறுமானால் "கர்த்தாவே உமக்குத் தோத்திரம்"- என்று நாம் அதிகமாக தேவனைப் புகழ்ந்து போற்றுகிற மக்களாக இருப்போம். கஷ்டங்கள், பாடுகள் பாடுகள் வரும் போது இவ்வுலகத்தாரை ஒப்பிட்டுப் பார்க்கிறோம். அவர்கள் விரும்புவதற்கு மேலாக எல்லாம் தரப்படுகிறது என்று சொல்லி, உள்ளத்தில் சோர்ந்து போகிறோம். அருமையான தேவ ஜனமே, உங்களுடைய வாழ்க்கையில் நன்மையானாலும் சரி, தீமையானாலும் சரி, உங்கள் ஜெபத்திற்குப் பதில் வந்தாலும், வராவிட்டாலும் சரி, நீங்கள் தேவனைத் துதித்து ஸ்தோத்தரியுங்கள். நம்முடைய தேவன் நமக்குத் தீங்கு செய்கிறவரல்ல. எது நன்மையானதோ அதைத் தருகிற தேவன்.
துதித்தலின் மூலமாக நடைபெற்ற நிகழ்ச்சி என்னவென்றால் அவர்களை அடக்கி வைத்திருந்த அஸ்திபாரங்கள் அசைந்தது என்று பார்க்கிறோம். 26ம் வசனத்தில் "சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாகப் பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்று போயிற்று" என்று பார்க்கிறோம். இங்கு மூன்று நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம். பூமி அதிர்ந்தது, சிறைச் சாலையின் அஸ்திபாரங்கள் அசைந்தது, இன்னும் மீண்டுமாக சிறைப்படுத்த முடியாதபடி தேவ வல்லமையானது சிறையிருப்பின் கிரியைகளை நொறுக்கினது. அது மாத்திரமல்ல, கதவுகள் திறக்கப்பட்டது. அடைக்கப்பட்ட ஆசீர்வாதங் களைப் பெற்றுக்கொள்ள எல்லாவிதமான அடைப்புகளும் நீங்கி வழிகள் திறக்கப்பட்டது. கட்டுகள் நீங்கினது. ஆசீர்வாதத்தின் வழிகள் திறக்கப்பட்டது. அருமையான தேவ ஜனமே, இன்றைக்கு அநேகருடைய வாழ்க்கையில் இந்தச் சிறையிருப்பின் நிமித்தமாக என் வாழ்க்கை இவ்வளவு தான் என்று நினைக்கிறார்கள். என் வாழ்க்கை துக்கத்தோடு, துயரத்தோடு மண்ணுக்குள் போக வேண்டியது தான் என்று சொல்லுகிறார்கள். ஆனால் தேவனைத் துதித்து ஆராதிக்கிற ஒரு பகுதியை நீங்கள் உங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நிறைவேற்றும் போது உங்கள் வாழ்க்கையில் உள்ள கட்டுகள், உங்களைச் சிறைப்படுத்தியுள்ள பிரச்சனைகள் உங்களை விட்டு விலகிச் செல்லும். அது மாத்திரமல்ல, வாசல்கள் திறக்கப்படும். அல்லேலூயா!
மேலும் II நாளாகமம் 20:22,23ல் காண்கிறபடி தேவனைத் துதிக்கும்படியாக, பாடகர்களை இராணுவ வீரர்களுக்கு முன்னணியில் யோசபாத் ராஜா நிறுத்தினான் அவர்கள் பாடித் துதி செய்யத் தொடங்கியபோது யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிலிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத்தேசத்தா ரயும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப் பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள். கர்த்தரைத் துதித்துப்பாடும்பொழுது, இந்தத் துதியின் வல்லமையினால் சத்துருக்கள் நொறுங்கி விழுவார்கள், உங்களைச் சிறைப்படுத்தின எல்லா சிறையிருப்புகளிலுமிருந்தும் விடுவிக்கப்படுவீர்கள்.
2.துதியின் மூலம் கிடைக்கும் பாதுகாவல்:
"இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் தாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது; உன் மதில்களை இரட்சிப்பென்றும், உன் வாசல்களைத் துதியென்றும் சொல்லுவாய்." ஏசாயா 60:18.
நாம் தேவனைத் துதிக்கும்போது அவர் நம்முடைய வாழ்க்கையிலே சேதமின்றி சிறப்பாய் நம்மைக் காத்துக் கொள்ளுகிறவராய் இருக்கிறார். (ஏசாயா 60:18,19,20), ஏசாயா 60:1, 2 வசனங்களில் கூறப்பட்டுள்ளது போல கர்த்தருடைய ஒளியானது யார்மேல் வீசப்படுகிறதோ, கர்த்தர் யார் மேல் உதித்திருக்கிறாரோ அவர்கள் தேவனைத் துதி துதிக்கும் போது துதியின் மூலமாக தேவனுடைய பாதுகாவலையும், அழியாமையினுடைய மேன்மையையும் பெற்றுக் கொள்ளுகிறார்கள். நாம் துதியின் மூலமாய் இரட்சிப்பை அடைவதை சங்.18:3ல் பார்க்கிறோம். இரட்சிப்பைப் பெற்ற நாம் கர்த்தரைத் துதிக்கும் போது, அவர் நம்மை அழிவுக்கு விலக்கிக் காத்துக் கொள்ளுகிறவராய், சேதங்கள் நம்மில் தோன்றாதபடி நமக்கு அரணும் கோட்டையுமாய் மாறிவிடுகிறார். அநேகர் துதிப்பதற்கு வெட்கப்படுகிறார்கள். இரட்சிக்கப்பட்டவங்கள் கர்த்தரைத் துதிக்கும் போது, தேசத்தினுடைய கொடுமை நீங்குவதற்கு அவர் உதவுகிற தேவனாக இருக்கிறார்.
விடுதலை வேறு, இரட்சிப்பு வேறு. விடுதலை என்பது நம்முடைய வாழ்க்கையில் போராட்டங்களிலிருந்து விடுவிக்கப் படுகின்ற ஒரு காரியம். ஆனால் இரட்சிப்பு என்பது கிறிஸ்துவுக் குள்ளாய் முழுமையான ஒரு காரியம். விடுதலையோடு நின்று விடுகின்ற வாழ்க்கை கிறிஸ்தவ வாழ்க்கை அல்ல. விடுதலை பெற்றவர்களாய் நாம் தேவனுடைய இரட்சிப்பைப் பெற அவருடைய - ஒளி நமக்குள்ளே வீசும்படியாக, அவர் நமக்குள்ளே உதிப்பதற்கு உள்ளத்தைத் திறந்து கொடுக்கிறவர்களாக மாற வேண்டும் நம்முடைய கிறிஸ்தவ ஜீவியத்தில் நாம் இவ்விதமாய் கிறிஸ்துவுக் குள்ளாக வளருகிறவர்களாய் கர்த்தரைத் துதிக்கும் போது, நிச்சயமாகவே நாம் கர்த்தருடைய பாதுகாக்கும் கரங்களைக் காணமுடியும்..
அதுமாத்திரமல்ல, அவர் கோட்டையும், பலத்த அரணும் துருகமுமாயிருக்கிறார் என்று சொன்ன வார்த்தை நிறைவேற வேண்டுமென்றால் துதியின் மூலமாக அந்த (கோட்டை) வாக்குறுதிகள் பலப்படுத்தப்பட வேண்டும். நாம் துதிக்கும் போது, தேவனுடைய மகிமையின் பிரசன்னம் நம்மை மூடிக்கொள்ளும். தேவனுடைய மகிமையின் பிரசன்னம் இறங்குவதற்கு நாம் சோர்ந்து விடாமல் துதிக்க வேண்டும். அதிகமாகத் துதிக்க துதிக்க அந்த இடமானது தேவனுடைய மகிமையினால் நிறைந்து, அழிவில்லாதபடி தேவனுடையப் பாதுகாவலையும், சமாதானத்தையும் நாம் பெற்றுக் கொள்ள முடியும். 'உன் துக்க நாட்கள் முடிந்து போம்' என்று சொன்ன வாக்குறுதி நிறைவேறுவதை நீங்கள் பார்க்க முடியும். அநேகருடைய கள் வாழ்க்கையில் இரட்சிக்கப்பட்ட பிறகுதான் துக்கம் பெருகிக் கொண்டு இருக்கிறது. இந்தத் துக்கம் எப்பொழுது மாறும் என்று கலங்கிக் கொண்டிருக்கிறர்கள் ஆனால் இயேசு கிறிஸ்து நமக்கு பரி யோவான் 16:20ல் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்' என்று சொல்லியிருக்கிறார். அவர் உங்கள் வாழ்க்கையின் ஆவிக்குரிய போராட்டங்களை மாற்றி உங்களுக்கு ஒரு பாதுகாவலான வாழ்வினைத் தந்து, எந்த சேதமும் இல்லாதபடி உங்களை வழிநடத்துகிறவராய் இருக்கிறார். ஆகவே துதிக்கும் போது விடுதலையையும், இரட்சிப்பின் பூரணமான ஆசீர்வாதத்தையும், பாதுகாவலையும் பெற்றுக் கொள்ளுகிறோம்
3. துதியினால் ஜெய ஜீவியம்:
"மரித்தவர்களும், மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள். நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். அல்லேலூயா.' சங்கீதம் 115:17,18
துதி உங்களுக்குள் இருக்கும் போது மாத்திரமே நீங்கள் கர்த்தருக்குள் ஜீவனுள்ளவர்களாய் இருக்கிறீர்கள். துதியானது உங்கள் நாவுகளில் இருக்கும் போது, துதியானது உங்கள் உள்ளத்திலிருந்து பொங்கி வரும் போது மாத்திரமே நீங்கள் இன்னும் கிறிஸ்துவுக்குள் இருக்கிறீர்கள் என்பதை நிரூபிக்கக்கூடிய ஒரு அளவுகோலாய் இருக்கிறது. கர்த்தருக்குள் வாழுகிறவர்கள் கர்த்தரைத் துதிப்பார்கள். வேதத்தை ஆராய்ந்து பார்க்கும்போது, கர்த்தருக்குள் விடுதலையானவர்கள், கர்த்தருக்குள் பிழைக்கிறவர்கள் தேவனைத் துதிக்கிறவர்களாக மாறிவிடுகிறார்கள் என்று பார்க்கிறோம். ஏசாயா 38:19ல் "நான் இன்று செய்கிறது போல உயிரோடிருக்கிறவனே உம்மைத் துதிப்பான்…” என்று பார்க்கிறோம்.
இன்றைக்கு அநேக செத்த நிலமைகள் உண்டு. 1 தீமோத்தேயு 5: 6லே “சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள்’ என்று சொல்லப்படுகிறது. கிறிஸ்துவுக்குள் உண்மையாய் வாழாதவர்கள், உயிரோடே செத்தவர்கள். யார் என்றால் சுகபோகமாய் வாழ்கிறவர்களே இன்றைக்கு அநேக கர்த்தருடைய பிள்ளைகள் வாழ்க்கையிலே தவறான காரியம் உண்டு. கிறிஸ்துவுக்குளாய் எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்தவர்கள் இன்றைக்கு கிறிஸ்துவை வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் தேடி பெற்றுக் கொள்ள விரும்புகிறார்கள். ஐயா, வேலையை விட்டு விட்டேன். எல்லாவற்றையும் விட்டுவிட்டேன் என்று சொன்னவர்கள் இப்பொழுது என்ன செய்கிறார்கள் ? இந்த உலகத்தைத் தேடுகிறவர்களாய், ஆதாயப்படுத்துகிறவர்களாய் மாறுகிறார்கள்.'
மற்றொரு தேசத்தில் நான் ஒரு அருமையான சீன சகோதரனை அறிவேன். அவர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார். அவருக்குள்ளாய் உள்ள பண ஆசை இன்னுமாய் அழியவில்லை. அவர் சொன்ன காரியம் இது தான். பிரதர் முன்பு பிரதர் முன்பு நான் ஒரு ஃபாக்டரி (Factory) தான் வைத்திருந்தேன். இப்போது எனக்கு 3 Factory வேண்டும். அதற்காக நீங்கள் ஜெபியுங்க ஜெபியுங்கள். நானும் நானும் இதற்காகத் தான் ஜெபிக்கிறேன் என்று சொன்னார். யாரை பின்பற்றுவதற்காக வந்தவர்? எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தவர் இப்பொழுது எல்லாவற்றையும் கிறிஸ்துவின் நாமத்தினாலே பெற்றுக் கொள்ள விரும்புகிறார். வேதத்தில் அன்றன்றுள்ள ஆகாரத்தை எங்களுக்குத் தாரும் என்று இயேசு ஜெபிக்கக் கற்றுக் கொடுத்தார். ஆனால் வருங்காலத்திற்கென்றும், சந்ததிக்கென்றும் சேர்த்து வைக்க வேண்டிய காரியத்தை நமக்குச் சொல்லவில்லை. அப்படிப்பட்ட ஒரு ஐசுவரியத்தை நமக்குத் தருவேன் என்றும் சொல்லவில்லை. அவரை முதலாவது தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் கூட கொடுக்கப்படும் என்று சொல்லி இருக்கிறார். ஆகவே நாம் கவனமாக வேத ஒழுங்கின்படி நடப்போம்.
அருமையான ஜனமே, நம்முடைய வாழ்க்கையிலே இன்று சுகபோகமாய் வாழுகிற வாழ்க்கை நம்மை அறியாதபடியே இந்த கண்களின் இச்சைகளுக்கும், உலகத்தின் மேன்மைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அவற்றால் ஈர்க்கப்பட்டு, உயிரோடு செத்தவர்களாய் மாறுகிறோம். நம்முடைய கர்த்தர் ஏற்றகாலத்தில் ஏற்றவைகளைத் தரக்கூடியவர் நம்முடைய தேவன் உங்களுக்கு எது தேவையோ அதைத் தருவார். ஒரு நாளிலே நான் அதிகமாக ஜெயித்து உபவாசத்தோடு ஒரு இடத்திற்குப் புறப்பட்டேன். சரீரத்தில் சோர்வு அதிக நாட்கள் உபவாசமாயிருந்தபடியினால் சரீரத்தியதில் ஒரு பெலவீனம். ஆகவே நான் என் உள்ளத்தில் அந்த ஊருக்குச் செல்ல வேண்டும், பஸ்ஸில் இடம் கிடைக்குமோ கிடைக்காதோ என்று எண்ணிக் கொண்டே சென்றேன். ஆனால் அங்கு செல்வதற்கு ஒரு டீலக்ஸ் பஸ் கிடைத்தது. இன்னொரு நாள் நான் இன்றைக்கு உபவாசிக்க இயலாது, நான் சாப்பிடுவேன் என்று சொல்லி நன்றாகு சாப்பிட்டு விட்டு பஸ் ஏறச் சென்வேன். அந்த நாளில் கடைமீன்றான நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது , ஒரு அற்ப காரியம் தான். ஆனால் நம்முடைய மாம்சத்தின் இச்சைகளுக்கு இடம் கொடுத்து , சுகபோகமான வாழ்க்கையை நாம் வாஞ்சிக்கும் போது தடைகள் தோன்றுகிறது. ஆகவே சுகபோகமான வாழ்க்கை உயிரோடு செத்ததற்கு அடையாளம்,
இன்னுமாய் அநேக செத்த நிலைகள் உண்டு. இப்படிப்பட்ட செத்த நிலைகள் பாவத்தினாலும், அக்கிரமத்தினாலும் மரித்த நிலமை. பாவத்தின் சம்பளம் மரணம். "பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும்" எசேக்கியல் 18:4. இப்படியாக பல மரித்த நிலைகள் இருக்கிறதை நாம் பார்க்கிறோம். ஆனால் தேவனை நாம் துதிக்கும் போது, நாம் ஜீவனுள்ளவர்களாய் இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இன்றைக்குத் துதியுங்கள், ஸ்தோத்திரியுங்கள் என்று சொன்னால் அநேகருக்கு என்ன ஐயா இது பைத்தியக்காரத் தனமாக இருக்கிறதே, ஒரு முறை துதித்தால் போதாதா என்று கேட்பார்கள். அருமையான ஜனமே! நீங்கள் இரட்சிக்கப்பட்டவர்கள் என்று கிறிஸ்துவுக்குள் வெளியரங்கமான ஒரு காரியத்தைக் காண வேண்டுமென்று சொன்னால், துதியானது எப்போதும் உங்கள் வாயிலிருக்கவேண்டும். உங்களுடைய துதியானது உங்களுடைய ஆவிக்குரிய நிலையை அறிந்து கொள்ளக்கூடிய ஒரு அளவு கோலாக உள்ளது. மரித்தவர்கள் தேவனைத் துதியார்கள். பாவத்தின் நிமித்தம் மரித்து போனவர்கள் தேவனைத் துதிக்க முடியாது.
சத்துருவினால் பாதிக்கப்பட்டவர்கள் அந்நிய பாஷை பேசுவார்கள். நீங்கள் அதைப் பார்த்து ஏமாந்து விடக்கூடாது. பிசாசின் அடிமைத்தனத்திலிருந்து அந்நிய பாஷை பேசுகிறவர்கள் தேவனைத் துதிக்க மாட்டார்கள். தேவனைத் திட்டுவார்கள் ஒரு இடத்திற்கு ஊழியத்திற்குச் சென்றிருந்தோம். அங்கே மோசே என்ற பையன் பிசாசினால் பாதிக்கப்பட்டிருந்தான். அவன் நீங்கள் என்ன அந்நிய பாஷை பேசுகிறீர்கள், நானும் தான் பேசுகிறேன் என்று சொல்லி ஒரு மணிநேரம் ஒரே பாஷையாக பேசினான். அந்தப் பாஷையில் அவன் இயேசுவை திட்டி, திட்டி சபித்தான். ஆகவே கிறிஸ்துவுக்குள் நீங்கள் வாழவில்லை என்று சொன்னால், அவரை புகழ முடியாது, துதிக்க முடியாது. சிலருக்கு ஆவிக்குள் போராட்டம் வரும் முன்பு துதிக்கிறதில் தான் போராட்டம் வரும். கர்த்தரைத் துதிக்கவேண்டும் என்றால் தூக்கம் வந்து விடும். அது பிசாசின் தந்திரம மான காரியம்.. ஆனாலும் பரவாயில்லை என்று தேவனைத் துதிக்கும் போது, அந்தப் பிரச்சனை அப்படியே அமர்ந்துவிடும். இப்படியாக நீங்கள் கிறிஸ்துவுக்குள் வாழ்கிறீர்கள் என்பதற்கு ஒரு அடையாளம் என்னவென்றால் கர்த்தரை நீங்கள் எப்போதும் துதிப்பதே. ஆகவே துதியின் மூலமாக விடுதலையும், ஆசீர்வாதமும், பாதுகாவலும், சேதமில்லாத நிலையும் ஏற்படுகிறது. துதியின் மூலமாக நமது ஆவிக்குரிய நிலைமையை அறிந்து கொள்ள முடியும்.
4. துதியின் மூலம் தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றுகிறோம்:
"இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லி வருவார்கள்." ஏசாயா 43:21
நாம் தேவனைத் துதிக்கும் போது அவர் நம்மை உண்டாக்கின நோக்கத்தை நிறைவேற்றுகிற மக்களாக மாறிவிடுகிறோம். யார் யாரைக் கர்த்தர் தமக்கென்று ஏற்படுத்தியிருக்கிறாரோ அவர்கள் கர்த்தரின் துதியைச் சொல்லி வருவார்கள். தேவன் நம்மை சிருஷ்டித்ததில் அநேக காரியங்கள் உண்டு. ஆதி. 1:28ல் எல்லாவற்றையும் ஆண்டு கொள்வதற்கு நம்மை ஏற்படுத்தினார். எபே.2:10ல் நற்கிரியைகளைச் செய்வதற்கென்று நம்மை ஏற்படுத்தினார். ஏசாயா 43:7ல் தேவனை மகிமைப்படுத்த நம்மை உண்டாக்கினார் என்று பார்க்கிறோம். இப்படியாக தேவன் நம்மை உண்டாக்கினதற்கு பல காரியங்கள் இருந்தாலும், தேவன் நம்மை ஏற்படுத்தின பிரதானமான காரணம் என்னவென்றால் அவரைத் துதிப்பதற்கும், போற்றுவதற்கும், அவரை ஸ்தோத்தரித்து மகிமைப்படுத்துவதற்கும் தான்.
அருமையான தேவ ஜனமே, இன்றைக்கு தேவனைத் துதிக்கும் ஒரு உள்ளம் உங்களுக்கு இருக்குமானால் உங்களுடைய வாழ்க்கையானது கிறிஸ்துவின் நோக்கத்தை நிறைவுபடுத்து கிறதாக இருக்கிறது. இன்றைக்கு தேவனைத் துதியாதபடி, ஸ்தோத்திரியாதபடி இருளடைந்த வாழ்க்கையை அல்ல; தேவனை ஆராதிப்பதின் மூலமாக நாம் மெய்யாகவே தேவனின் படைப்பின் நோக்கத்தை நிறைவேற்றுகிற மக்களாக இருக்க வேண்டும். கர்த்தாவே எல்லா சூழ்நிலையிலும் உம்மை நான் துதிப்பேன். என்னை உண்டாக்கின நோக்கத்தை அறிந்து கொண்டேன். என்னுடைய வாழ்க்கையில் துக்கமான நேரத்திலும், கண்ணீரான வேளையிலும், என்னுடைய வாழ்க்கையிலே அன்பை இழந்து, அநாதையைப்போல் தவிக்கிற சூழ்நிலையிலும் நான் உம்மைத் துதிப்பேன். இன்றைக்கு
என்னுடைய வாழ்க்கையிலே இந்தத் தீர்மானத்தைச் செய்கிறேன் ஒரு புதிய தீர்மானத்தோடுக காணப்படுவோம். தேவன் ஒவ்வொருவரையும் அதற்கென்றுதான் சிருஷ்டித்திருக்கிறார். நம் நம்முடைய வாயை விரிவாய்த் திறந்து தேவனைத் துதிக்கும்போது அதை நிரப்புவேன் என்ற தேவன், கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன் என்ற தேவன், தம்முடைய சமாதானத்தினாலும், சந்தோஷத்தினாலும் நம்மை நிரப்புகிற தேவன், அவருடைய நாமம் மகிமைப்படும் போது நம்மை ஆசீர்வதிக்கிற தேவனாக இருக்கிறார்.
கோடான கோடி தூதர்கள் கர்த்தரைக் சூழ்ந்து போற்றி துதித்தாலும் அவர்களுக்குள்ளாக ஏற்பட்ட மேட்டிமை நிமித்தமாக அந்தத் துதியின் காரியங்களைச் செய்யாதபடி தேவனுக்கு ஈடாக உயர்த்தினபடியினாலே தள்ளப்பட்ட தூதர்கள் இங்களைக்கும் உண்டு. தள்ளப்பட்டகள தூதர்களை அறிந்திருக்கிறார். தம்மைத் துதிப்பதற்கு, போற்றுவதற்கு ஏற்படுத்தப்பட்டவர்கள் வீழ்ந்தபடியினாலே அதற்குப் பதிலாக உங்களையும் என்னையும் அவர் ஏற்படுத்தியிருக்கிறார். ஆகவே இன்றைக்கு நாம் தேவனைப் போற்றி, துதித்து ஆராதிக்கிற மக்களாக மாறுவோமானால் நாம் சிருஷ்டிக்கப்பட்ட நோக்கத்தை கர்த்தருக்குள் நிறைவேற்றுகிற மக்களா இருக்கிறோம். ஆகவே இன்றுமுதல் நாம் தேவனைத் துதிப்பதில் குறைவுபடாதபடி நம்மைக் காத்துக்கொள்வோம்.
5. துதி சுவிசேஷத்தின் பூரணமாகும்:
"கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்க கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார்..” ஏசாயா 61:1
''சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாக துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்." ஏசாயா 61:3
நாம் தேவனைத் துதிக்க வேண்டும் என்பது தேவனுடைய ஆவியினால் நிரம்பிய நம் ஒவ்வொருவருக்கும் அருளப்பட்டிருக்கிற தேவ ஆலோசனை ஆகும். கர்த்தருடைய ஊழியர்களாக எதற்கு நம்மை அனுப்பினார் என்றால் ஒடுங்கின ஆவியையுடையளாக மக்களுக்குத் துதியின் ஆடையைத் தருவதற்காகும். தேவனோடு ஒப்புரவாகி, தேவனைத் துதித்து அவரை ஆனந்தப்படுத்துவதுதான் சுவிசேஷத்தினுடைய ஒரு முழுமை. சுவிசேஷத்தின் பணியானது மனிதனுடைய சரீரத்திற்கடுத்த காரியங்களைக் கொண்டது அல்ல. சுகம் பெறுவது, வியாதியிலிருந்து விடுவிக்கப்படுவது, சரீரத்திற் கடுத்த நன்மைகளைப் தேளைம் பெற்றுகொள்வது அல்ல, சுவிசேஷமானது பாவத்தினால் தேவனுக்கும், சீரானுக்கும், நமக்கும் இடையே காணப்படும் பிளவு. பிரிவினைச் சீராக்கப்பட்டு தேவனோடு ஒப்புரவாக்கப்பட்டு இணைக்கப்பட்ட மக்களாக மாற வேண்டும் வேண்டும் என்பது தான் சுவிசேஷத்தின் அடிப்படை நோக்கமாக இருக்கிறது. இன்றைக்கு ஷகராகிய நாம், அனுப்பப்பட்டவர்களாகிய நாம் ஒப்புரவாகுதலின் ஊழியத்தை நிறைவேற்றுகிறவர்களாக, ஆவிக்குள்ளாக ஒடுங்கிய மக்களுக்கு துதியின் ஆடையை உடுத்துகிற மக்களாக இருக்க வேண்டும். துதியின் வஸ்திரத்தை எடுத்துச் செல்லுகிற மக்களாக மாற வேண்டும்.
ஏசாயா 42:12 ல் "கர்த்தருக்கு மகிமையைச் செலுத்தி, அவர் துதியைத் தீவுகளில் அறிவிப்பார்களாக" என்று பார்க்கிறோம். சுவிசேஷத்தின் முழுமை இங்கு கூறப்பட்டுள்ளது. சுவிசேஷத்தை அறிவிப்பதற்குக் கட்டளைக் கொடுத்திருக்கிற அந்த இயேசுவி னுடைய வார்த்தையின்படி நீங்கள் அவருடைய சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டுமென்றால் ஒடுங்கின மக்களுக்குத் துதியின் ஆடையைத் தரிப்பிக்க வேண்டும். இரட்சிப்பின் வஸ்திரம் உண்டு. விடுதலையின் காரியம் உண்டு. இவைகளெல்லாவற்றிலும் நாம் அவர்களை முழுமை பெறச் செய்கிற காரியம் துதியின் ஆடையைக் கொடுப்பதாகும். துதியின் மூலமாக தேவனுடைய கிருபையை, ஆசிர்வாதங்களைப் பெற்ற நாம் கர்த்தருடைய ஆலோசனையின்படி இருளில் மக்களுக்குத் துதியின் ஆடையைக் கொண்டு செல்வது தான் சுவிசேஷப் பணியாகும். இன்றைக்கு நாம் அப்படிப்பட்ட ஊழியத்தைச் செய்ய கவனமுள்ள வர்களாக மாற வேண்டும். ஒரு மெய்யான ஆராதனையைச் செய்வதற்கு அவர்களைப் பழக்குவிக்கிற மக்களாக மாற வேண்டும்..
இப்படியாக நாம் இந்தத் துதியின் ஆடையாகிய விதைகளை விதைக்கும் போது "கர்த்தராகிய ஆண்டவர் எல்லா ஜாதிகளுக்கும் முன்பாக நீதியையும், துதியையும் முளைக்கப்பண்ணுவார்" என்று ஏசாயா 61:11ல் பார்க்கிறோம். நீங்கள் துதியைச் சுவிசேஷமாக கொண்டு செல்லும் போது, துதியின் மூலமாக வருகிற ஆசீர்வாதங்களைத் துதியானது அவர்களுக்குள்ளாக முளைக்கப் பண்ணுகிறது. துதிக்கக்கூடிய இருதயமானது அவர்களுக்குள் உருவாக்கப்படுகிறது. எல்லாவற்றிலும் தேவனைப் புகழ்ந்து, துதித்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வதற்குரிய மனப் பக்குவத்தை, ஆவிக்குரிய ஒரு முழுமையான நிலமையை அடைந்து விடுகிறார்கள்.
அருமையான தேவ ஜனமே, துதியின் மூலமாக தேவனை மகிமைப்படுத்துவதற்கு நம்மை முழுமையாக அர்ப்பணிப்போமானால் நம்மைத் தெரிந்து கொண்ட இராஜாதிராஜா நம்மை ஆசீர்வதிகின்றவராக இருக்கிறார். நம்மை பரிசுத்தமாக்குகிற கர்த்தர் நம்மை முற்றிலுமாக பயன்படுத்துவார். இவ்விதமாக இந்தத் துதியின் மூலமாக விடுதலை மட்டுமல்ல, வாசல்கள் திறக்கப்படுவது மட்டுமல்ல, பாதுகாவல் மாத்திரமல்ல, அவருக்குள் ஜீவிக்கிற அறிவிலே வளர்ந்து, சுவிசேஷத்தின் மூலமாக, துதியின் மூலமாக, நாம் சிருஷ்டிக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றி, சுவிசேஷத்தை பூரணப்படுத்துகிற மக்களாக நாம் மாறிவிடுவோம். இந்தத் துதியின் காரியங்கள் நமக்குள் முளைப்பது போல, நம்முடைய தேசத்தில் முளைத்து வளருவதற்கு தேவன் நமக்குள் அந்தத் துதியை முழுமையாக்குவாராக.
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்து இயேசுவின் பணியில்,
மறைந்த சகோ. C எபனேசர் பால், (இந்தச் செய்தி 1994 ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட்டது)