செய்த தீர்மானங்களை நிறைவேற்ற தேவ பெலன் நாடி ஓர் மன்றாட்டுஜெபம்

அன்பின் தேவனே, இந்த நல்ல வேளைக்காக நன்றி கூறுகிறேன். நீர் கடந்த காலத்தில் நல்லவரும் போதுமானவருமாய் இருந்தீர், அதற்காக ஸ்தோத்திரம் செலுத்துகிறேன். கடந்த காலத்தில் கண்மணியைப் போல என்னைக் காத்ததற்காக உமக்கு நன்றி கர்த்தாவே. இன்று உமது சமுகத்தில் என் பெலவீனங்கள், என் புழைய பாவச் சுபாவம், வழக்கம் ஆகியவற்றை விட்டு விடுவேன் என்று நான் உமது சமுகத்தில் செய்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு எனக்கு பெலனைத் தாரும். பலமுறை என் தீர்மானத்தில் மீறி. என் வாழ்வு இவ்வளவுதான், நான் உமக்கு முன்பாக இனி பரிசுத்தமாய் வாழ இயலாது என்று உள்ளத்தில் சோர்ந்து, தொடர்ந்து செய்ய வேண்டிய பணி, கடமை, ஜெப ஜீவியத்தை விட்டுவிடுகிறேன் . இன்று உமது கரத்தால் என்னைப் பிடித்துத் தாங்கி, உமது பெலத்தால் என்னை இடைகட்டி நடத்தும். சோதனைகளையும், பாடுகளையும் எதிர்ப்புகளையும் மேற்கொள்ள போதுமான பெலத்தை என் ஆவி, ஆத்துமா, சரீரத்தில் தாரும். சரீர இச்சைகளை வெறுத்து உமது மாறாத மகிமை நிறைந்த அன்பை நாடியே வாழ உதவி செய்யும். உம்முடன் நெருங்கிய உறவினை எனக்குத் தாரும். இவ்வுலக மேன்மைக்காக, சரீர பாவ சந்தோஷத்திற்காக நான் உம்முடையவன்/ உம்முடையவள் என்ற உறவினை விட்டு விடாதபடி என்னைப் பெலப்படுத்தும். என் காதுகள் நலமானதைக் கேட்டு, தீர்மானத்தை நிறைவேற்ற உதவி செய்யும். என் கண்கள் நலமானதைப் பார்க்க போதுமான மனஉறுதியைத் தாரும். தீர்மானத்தை மீறி, தவறு செய்து, தண்டனை அடையாது காத்தருளும். தீர்மானத்தை மீறி விழுந்து போகாதபடி தயவாய் என்னைத் தாங்கும். உமது சமுகத்தில் என்னைத் தாழ்த்துகிறேன். என்னை உமது இரத்தத்தால் கழுவி, உமது தூய ஆவியானவரினாலும், உமது வார்த்தையினாலும் பெலப்படுத்தும். நீர் அப்படியேச் செய்கிறீர் என்று உம்மைத் துதிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டுகிறேன் நல்ல பிதாவே! ஆமென்.