ஜெபம்

                                                                                                     சுகமும், சமாதானமும் நிறைந்த வாழ்வு வாழ ஒரு ஜெபம்

அன்பின் தேவனே. இந்த ஜெப நேரத்திற்காக உம்மைத் துதிக்கிறேன்; ஸ்தோத்தரிக்கிறேன். கர்த்தாவே, சென்ற காலங்களில் என் ஜெபத்தைக் கேட்டு என்னிலும் என் குடும்பத்தாரிலும் பூரண சுகத்தைக் கொடுத்தீர் அதற்காக உம்மைத் துதிக்கிறேன்; ஸ்தோத்தரிக்கிறேன். சிற்சில நேரங்களில் எங்கு இந்த வியாதி எனக்கு வந்துவிடுமோ என்ற பயமும், உள்ளத்தில் போராட்டமும் வந்து விடுகிறது. சிறிய சுகவீனம் பெரிய பயத்தையும், வீண் செலவையும் கொண்டு வந்து விடுகிறது. இதினால் நான் சமாதானம் இழந்து தவிக்கிறேன். அன்பின் தேவனே, இன்று தயவாய் எனக்கு இரங்கி, என் ஜெபத்தைக் கேளும். பூரண சுகத்தை எல்லையில் உள்ளவர்கள் மீதும் பெருகச் செய்யும். ஒவ்வொரு சிறிய காரியத்திலும் என் உள்ளத்தில் சமாதானத்தை இழந்து நான் மிகவும் தவிக்கிறேன். நீர் ஒருவரே சமாதான பிரபு. என் வாழ்வில் உமது சமாதானம் ஒன்றே வேண்டும். என் குடும்ப வாழ்விலும் சமாதானத்தைப் பெருகச் செய்யும். நான் வேலை பார்க்கும் ஸ்தலத்திலும் இன்றே சமாதானத்தை உண்டாக்குவீராக. நீர் சொல்ல ஆகும், நீர் கட்டளையிட நிற்கும் என்ற வாக்கின்படி என் எல்லைகளில் நீர் எங்களுக்கென்று வைத்துப்போன சமாதானத்தை உண்டாக்குவீராக. கடந்த நாட்களில் நான் செய்த ஒவ்வொரு ஜெபத்தையும் கேட்டு அதிசயமாய் காரியங்களைச் செய்தீர். நீர் அவ்வாறே இப்பொழுதும் செய்வீர் என்று உம்மைப் போற்றித் துதிக்கிறேன். எனக்கு இரங்கும், கர்த்தாவே. என் உள்ளம் மகிழும்படி செய்வீராக. இயேசுகிறிஸ்துவின் மூலம் வேண்டுகிறேன், நல்ல பிதாவே. ஆமென்.


E- STORE