"அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும் பொருட்டு

                                                                                                                      அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள்."

                                                                                                                                                                                                                         யோவான் 8:6

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே வாழ்த்துகிறேன்.

ஒரு பகுதி ஊழியத்தின்போது ஒரு ஊழியருடைய வீட்டில் தங்கினேன். திருமணமாகாத ஊழியர் அவர். சபையில் பொறுப்பாய் இருந்த ஒருவர் செய்த தவறான காரியத்தைக் கண்கூடாய்ப் பார்த்த படியால், அவரைக் கண்டித்தார். அவர் கோபப்பட்டு இந்த ஊழியரைப் பார்த்து, நீ என்ன யோக்கியனா என்று சவால் விட்டுச் சென்றார். அத்துடன் அவர் ஒரு மனிதனை அணுகி செய்த சூனியத்தினாலே அந்த ஊழியருடைய வீட்டில் மிகுந்த போராட்டம் பெருகினது. பணம் வைத்திருக்கும் பெட்டியில் உள்ள பணம் காணாமல் போய்விடும். இவர் படுத்திருக்கும் படுக்கையில் மிகுதியாக மல்லிகைப்பூ இருக்கும். ஒவ்வொரு நாளும், ஞாயிறும் யார் வந்தாலும் வெளியே நிறுத்தி விட்டு, அவர் படுத்திருக்கும் அறையைச் சுத்தம் பண்ணுவார். அங்கு நான் சென்ற நாளிலே இவ்விதமான காரியங்கள் நடைபெற்றதே என்று அவரைக் கேட்டேன். அவர் அழுதார். கர்த்தர் காரியங்களை அறிந்திருக்கிறார் என்று கர்த்தரைத் துதித்தார். நம்முடைய தேவன் குற்றப்படுத்தினவர்களைக் குற்றப்படுத்துகிற தேவன் என்று அவருக்கு கர்த்தருடைய வார்த்தை வெளிப்பட்டது.உனக்கு விரோதமாய்த் தீங்கு செய்பவன் இந்த இடத்திலே இருக்க மாட்டான். அவன் எல்லைகளில் அவனைக் குற்றப்படுத்தி, வெட்கப்படுத்தி அகற்றப்படுவான் என்று கர்த்தர் வெளிப்படுத்தினார். அந்தப்படியே வேலை செய்த இடத்தில் பலகாலமாய் அவன் தவறு செய்ததைக் கண்டுபிடித்து, பணியிலிருந்து அவனை நீக்கி, அவ்விடத்திலிருந்து அனுப்பிவிட்டார்கள்.

அன்பு சகோதரனே, சகோதரியே, உன் ஊழியத்தின் பாதையில் உன்னைக் குற்றப்படுத்தி, குறைவுகளைப் பறைசாற்றுகிற மக்களுக்கு மத்தியிலே உன்னை நிலைப்படுத்துவார். குற்றப்படுத்தினவன் குற்றப் படுத்தப்பட்டு அந்த இடத்திலிருந்து அகற்றப்படுவதைக் காண்பீர்கள்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                             சகோ. C. எபனேசர் பால்.