இன்னும் என் மகன் /மகள் படிக்க வழி திறக்கப்பட வில்லையே என்று கலங்கும் பெற்றோர்க்காக ஒரு ஜெபம்

அன்பின் தேவனே, இந்த நல்ல ஜெப நேரத்திற்காக உமக்கு ஸ்தோத்திரம். இதுவரை கர்த்தாவே, என் ஜெபங்களைக் கேட்டு என் பிள்ளை/பிள்ளைகளின் வாழ்க்கையிலே நன்றாய்ப் படிக்கவும், நல்ல பாடத்திட்டங்களை எடுக்கவும். நீர் உதவி செய்ததற்காக உமக்கு ஸ்தோத்திரம். இப்பொழுதும் கர்த்தாவே, என்ன படிக்க வேண்டும் என்று நிர்ணயித்து அதற்காக மனு செய்திருந்தும், என் பிள்ளைக்கு இன்னும் பதில் வராதபடியால் சோர்ந்தும், கலங்கியும் இருக்கிறேன். சில சமயங்களில் இந்த ஆண்டிலே என் பிள்ளை எங்கும் படிக்கச் சேராமல் இந்த வருஷத்தைச் செலவிட வேண்டுமோ என்ற எண்ணம் துக்கத்தை அதிகரிக்கின்றது. ஜெபத்தைக் கேட்கிற தேவனே, தயவாய் என் ஜெபத்தைக் கேட்டு, என் பிள்ளைக்கு/பிள்ளைகளுக்கு வேண்டிய இடத்தைத் தாரும். இயேசு கிறிஸ்துவே. என் பிள்ளை/பிள்ளைகளின் பிரச்சனையின் போதெல்லாம் என் ஜெபத்தைக் கேட்டு, சமாதானத்தையும், சந்தோஷத்தையும் பெருகச் செய்தீர். அந்தப் பிரச்சனைகள் தொடராதபடி அதின் காரியங்களை முடிக்கவும் உதவி செய்தீர். இயேசு கிறிஸ்துவே, என் பிள்ளை/பிள்ளைகளில் தோன்றின பெலவீனங்களிலிருந்து ஜெபத்தைக் கேட்டு. அற்புதமான சுகத்தைக் கொடுத்தவரே, உமக்கு ஸ்தோத்திரம். நீர் கிருபையாய்க் கொடுத்த பிள்ளை/பிள்ளைகளை ஆசீர்வதியும் கர்த்தாவே. உன்னை விட்டு விலகுவதில்லை, கைவிடுவதில்லை என்று சொன்னவரே. என்னைக் கைவிடாது இம்மட்டும் என்னோடிருந்து, என் ஜெபத்தைக் கேட்டு, என் வாஞ்சைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றி என் பிள்ளை/பிள்ளைகளை ஆசீர்வதித்தபடியினால் உமக்கு ஸ்தோத்திரம். என்னுடைய மகன்/மகள் வீணான உலகக் காரியங்களில் சிக்குண்டு போனிலே விளையாடி தன் நேரத்தைச் செலவிட்டபோது. மிகுந்த துயரத்தோடு ஏறெடுத்த ஜெபத்தைக் கேட்டு அதிலிருந்து விடுதலை தந்தவரே, உமக்கு ஸ்தோத்திரம். இப்போதும் என் மகன்/மகள் நலமான. பிரயோஜனமான கல்வியைக் கற்க வாசலைத் திறந்து தாரும். கர்த்தாவே. என் மகன்/மகள் படிக்க வேண்டிய உயர்கல்வியை அருகிலுள்ள கல்வி ஸ்தாபனத்தில் படிக்க உதவி செய்யும் கர்த்தாவே. நீர் அப்படிச் செய்வீர் என்று நம்பி உம்மைத் துதிக்கிறேன், ஸ்தோத்திரிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.