சிந்தி செயல்படு

                                                  

                                                          '' அவர் சொல்ல ஆகும்... ''

                                                                                     சங்கீதம் 33:9

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

                          கர்த்தராகிய  இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

                   ஒரு முறை போபால் பகுதிகளிலே ஊழியம் செய்யும் போது ஒரு சகோதரன் எனக்குச் சென்னையில் ஒரு சொந்த  வீடு இருக்கிறது. அதை ஒரு ஊழியக்காரி ஒருவர் சபை நடத்துவதற்கு  கேட்டார்கள். அதைக் குறைந்த வாடகைக்குக்   கொடுத்தேன், இப்பொழுது அந்த வீட்டிற்கு அவர்கள் வாடகை தருவதில்லை. சில ஆண்டுகள் மாத்திரம் வாடகைக்  கொடுத்தார்கள். அந்த ஊழியக்காரி இந்த வீட்டைக் கர்த்தர் எனக்கே கொடுத்துவிட்டார் என்றுச் சொல்லிவிட்டார். எனக்கு இந்த வீடு மட்டும் தான் சொந்தமாய் இருக்கிறது.ஆதலால் நான் என்னச்  செய்வது என்று என்னிடம் கேட்டார்.அந்த வீட்டைக் குறித்துக் கவலை வேண்டாம். நீங்கள் ஒருவேளை உபவாசத்தோடு கர்த்தரின் சமூகத்தை  நாடி உங்கள் பிரச்னையைச் சொல்லுங்கள் என்று சொன்னேன். இவ்விதமாய் நீங்கள் ஜெபிக்கும்போது இந்த ஊழியக்காரி அந்த வீட்டின் சாவியை உங்களிடம் கொடுத்துவிட்டு,அந்த வீட்டைக் காலி செய்து விடுவார் என்று கர்த்தருடைய ஆலோசனையைக் கூறினேன். அந்தச் சகோதரனும் தன்  பிரச்சனைத் தீர்ந்து , தன்  வீட்டைப் பெற்றுக் கொண்டு,மீண்டுமாக வாடகைக்கு விட வேண்டும் என்ற ஆர்வத்துடன் ஜெபிக்க ஆரம்பித்தார். அவரும் ஒரு ஊழியக்காரராயிருந்தபடியால் கர்த்தரின் கரம் கிரியைச் செய்ய ஆரம்பித்தது.ஜெபத்தைக் கேட்கும்தேவன் அவர் ஜெபத்தைக் கேட்டு ,அந்த ஊழியக்காரியின் உள்ளத்தில் பேசினபடியால் ,அவர் அந்த வீட்டைக் காலிசெய்து, சாவியை சில தினங்களிலே கொடுத்து விட்டு, சென்றுவிட்டார். கர்த்தரின் சமூகத்தை நோக்கி  ஜெபிக்கும் ஜெபத்திற்குப் பதில் தரும் தேவன் அதிசயத்தைச் செய்தார். அவர் சொல்ல ஆகும்; அவர் கட்டளையிட  நிற்கும் என்ற வார்த்தை நிறைவேறக்   கண்டார்.

          இதை வாசிக்கும் அருமையான சகோதரனே /சகோதரியே, என் வீட்டின் பிரச்சனைத் தீருமா, நான் அதை எவ்வாறு செய்வது என்று கலங்கி கொண்டிருக்கிற உன் காரியங்களைக் கர்த்தரிடம் ஜெபத்தின் மூலமாய் தெரியப்படுத்துங்கள். அவரே ராஜாக்களின் இருதயங்களை நீர்க்கால்களைப் போல திருப்பும்    அதிகாரம் உடையவராயிருக்கிறார். ஆகையால் நீங்கள் ஒரு போதும் எதையும்    இழந்து போகமாட்டீர்கள்.

                                                                             கர்த்தர்  நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                                                                   சகோ.சி.எபனேசர் பால் .