ஜெபம்

                                                              பிள்ளைகளின் சுக நலனுக்காக ஒரு ஜெபம்

                                      அன்பின் தேவனே, உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உம் சமூகத்தில் என்னைத் தாழ்த்துகிறேன். நீர் என் ஜெபத்தைக் கேட்டு ,பல பிரச்னைகளைத் தீர்த்து இருக்கிறீர், அதற்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்.என்னுடைய வாஞ்சைகளை  நிறைவேற்றும்படி நான் விரும்பியதற்கும் வேண்டினதற்கும் மேலான விதத்தில் எனக்கு கொடுத்த அருமையான பிள்ளைகளுக்காக ஸ்தோத்திரம் செலுத்துகிறேன். அவர்கள் உமக்கு ஏற்ற பிள்ளைகளாய் வளரவும், கல்வி / கேள்வி/ ஞானத்தினால்  நிறைந்து  இருக்கவும்  உம்மை நோக்கி மன்றாடுகிறேன். அவர்களின் வாழ்க்கையை நீர் பூரணமாக ஆசீர்வதிக்கவேண்டும்  என்று உம்மிடத்தில் மன்றாடுகிறேன். பள்ளிக்குப்  படிக்கச் சென்று விடுவதால் பல காரியங்களில் எனக்கு கவலை உண்டாகிறது. அவர்களின் சரீர சுகம் கெட்டுப்போகாமல் நீர் அவர்களைக் கண்ணின் மணிபோல் காக்க வேண்டுமென்று கெஞ்சி நிற்கிறேன்.கர்த்தாவே, நீர் எனக்கு ஈவாய் கொடுத்த பிள்ளைகளுக்காய் உம்மை துதிக்கிறேன். அவர்கள் வெளியே விற்கக் கூடிய தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்டு, அதன் மூலம் வேதனையான நோய்களை வருவித்துக் கொள்ளாதபடி காத்துக் கொள்வீராக. கர்த்தாவே, உம்முடைய தயவுள்ள பிரசன்னம் அவர்களை நிரப்புவதாக. எந்த அசம்பாவிதமும் நடைபெறாதபடி நீர் காத்துக் கொள்வீராக. இன்றைக்கு இயேசு கிறிஸ்துவின் ஆணிபாய்ந்த அன்பின் கரங்கள் அவர்களைப்  பாதுகாக்கட்டும். பரிசுத்தத்தினாலும் பரிபூரண ஞானத்தினாலும் நிறைத்து வழிநடத்துவீராக. அவர்களுடைய உள்ளங்கள் சிறு பிராயத்திலிருந்து வேதத்தை நேசிக்க ஏற்றதாயிருக்கட்டும் . எந்தத்  தீய பழக்க வழக்கத்தையும் கற்றுக் கொள்ளாதிருக்க உதவிச் செய்யும். உம்முடைய காக்கும் தூதர்களைக் கொண்டு அவர்களைக் காத்து நடத்தும்.உம்முடைய நற்பண்புகளினால் நிறைந்திருக்கும் நல்வாழ்வைத் தாரும். சிறுபிராயத்திலிருந்தே உமக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் உள்ளத்தில் வைத்தருளும். இயேசு கிறிஸ்துவே என் பிள்ளைகளின் சுகத்தையும் பெலத்தையும் பெறுக செய்து ஆசீர்வதியும். நீர் அப்படிச்செய்வீரென்று நம்பி உமக்கு துதி  ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன்.இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, ஆமென் .