அன்பின் தேவனே, இந்த ஆண்டைக் கிருபையாக காணச் செய்த தயவுக்காக ஸ்தோத்திரம். நீர் எனக்குப் பாராட்டின அன்புக்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். கர்த்தாவே, கடந்த நாட்களில் எனக்கு ஜீவனைத் தந்ததுமல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர். உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றியது. நீர் உமது அன்பின் கரத்தினால் என்னைத் தாங்கி பராமரித்த, பாதுகாத்த செயலுக்காக நன்றி கூறுகிறேன். இந்த ஆண்டில் என்னை நீர் செவ்வையாய், மேன்மையின் பாதையில் நடத்துவீர் என்று உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். இயேசு கிறிஸ்துவே, இந்த ஆண்டில் நான் செய்துள்ள எல்லாத் தீர்மானங்களையும் உமக்குள், உம்மைக் கொண்டு செய்ய எனக்கு உதவி செய்வீர் என்று உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். இந்த ஆண்டிலே நான் இன்னும் உமக்குள் பலப்படவும், ஆசீர்வதிக்கப்படவும் விரும்புகிறேன். உமது நல்லாவியினால், என்னை வருட ஆரம்ப முதல் முடிவு வரை வழி நடத்தும். சென்ற வாழ்நாட்களில் நான் பெற்ற நன்மைகளைக் காட்டிலும், இந்த ஆண்டிலே மேலான சிறந்த நல் ஆசீர்வாதத்தைத் தருவீர் என்று உம்மை மிகுதியாய் ஸ்தோத்தரிக்கிறேன். கர்த்தாவே, சென்ற நாட்களில் தடையான சகல காரியங்களிலும் தடைகளை நீக்கி என்னிலும்/என் பிள்ளைகளிலும்/என் கணவரிலும்/ என் மனைவியிலும்/என் பெற்றோரிலும் நல்ல சுகத்தையும் பெலத்தையும் ஈந்து ஆசீர்வதியும். கர்த்தாவே, என் பிள்ளைகளை நீர் போதிக்கவும், அவர்கள் உம் வழி நடக்கவும் உதவி செய்யும். இந்த ஆண்டிலே தடைகள் எல்லாம் உம்மால் நீக்கப்பட்டு திருமணம், வேலை, உத்தியோக உயர்வு எனக்கு/ என் பிள்ளைகளுக்கு நேர்த்தியாய் கிடைக்கச் செய்வீராக. நீர் இவைகளைச் செய்வீர் என்று ஸ்தோத்தரிக்கிறேன். உம்மால் சகல நம்மைகளையும் பூரணமாகப் பெற்று நல்வாழ்வு வாழ எனக்கு உதவி செய்யும். அன்பின் தேவனே, கடந்த ஆண்டில் உண்டான எந்த போராட்டங்களும் என்னை இனித் தொடராது காத்து என்னை நடத்தும்படி மிகுந்த தாழ்மையுடன் கெஞ்சி கேட்கிறேன். கர்த்தாவே, இந்த ஆண்டை மிகுந்த ஆசீர்வாத ஆண்டாக மாற்றி ஆசீர்வதிப்பீர் என்று உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். என்னை உமது பாதுகாக்கும் கரங்களில் தாங்கி ஏந்தி நடத்துவீர் என்றுஉம்மை ஸ்தோத்தரிக்கிறேன். வருஷத்தை நன்மையினாலே முடிசூட்டும் அன்பின் தேவனே, என் ஜெபத்தைக் கேட்டு என்னையும், என் குடும்பத்தையும் ஆசீர்வதியும். இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.