சிந்தி செயல்படு

"என் நீதிவிளங்க விரும்புகிறவர்கள் கெம்பீரித்து மகிழ்ந்து,

தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமையுண்டதாக..."   சங்கீதம் 35:27

கிறிஸ்துவுக்குள் பிரியமவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

ஒரு அருமையான தேவன் ஊழியர் தன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது அவருடைய சக்கரத்திலே ஏறிய பாம்பு ஒன்று அவரை பல இடங்களில் கொத்தியது. அதனால் அவர் மயங்கி விழுந்து விட்டார். விசுவாசத்தில் வாழ்ந்து கொண்டிருந்த எந்த மருந்தும் ஊசியும் எடுக்காத தேவ ஊழியர். மயக்கமடைந்தவர், சுயநினைவு இழந்திருந்தார். விசுவாசிகளுடன் தங்கியிருந்த அவரைக் கர்த்தர் நேசித்தார். சாவுக்கு ஒப்புக்கொடாது காத்து வந்தார். கேள்விப்பட்டு அப்பகுதி ஊழியத்தின் பாதியிலே அவர் இருக்கும் இடம் சென்று ஜெபிக்க கர்த்தர் கிருபை செய்தார். கர்த்தர் ஊழியர்கள் எல்லாருடைய ஜெபத்தையும் கேட்டு அவரின் கண்கள் திறக்கச் செய்தார். சுய நினைவுக்கு வரவும் செய்தார். கர்த்தரின் கிருபையால் மீண்டும் தன் ஊழியத்தை செய்ய கர்த்தர் தயவு செய்தார்.

அன்பின் தேவப்பிள்ளையே, இன்று நம் வாழ்வில் பற்பல நினையாத வேதனைகள் தோன்றி நம் ஜீவனைப்பறிக்க போராடலாம்.  வாழ்வினை முடிக்க சத்துரு முயற்சிக்கலாம். நம்மை நேசிக்கிற கர்த்தர் 'நான் சாகாமல் பிழைத்திருந்து, கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன்.' என்ற சங்கீதம் 118:17ன் படி காப்பார்.

கைவிடாது நடத்தி, தமது வல்லமையை உங்கள் மூலம் வெளிப்படுத்துவார். சத்துருவின் தாக்குதலினால் சேர்ந்து போக வேண்டாம். இயேசு கிறிஸ்து அற்புதம் செய்வார். ஜெயம் கொடுப்பார்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

சகோ. C. எபினேசர் பால்