சிந்தி செயல்படு

 

கர்த்தர்  உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார் ;

அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்." சங்கீதம்  121:7

                                                                          

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

                                                                            

                     கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன் .

                    ஒருமுறை ஒரு வாலிபன் புதிய, அதிக விரைவான நவீன மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கினான். அதிகமான விலைக்கு அவன் தாயார் வாங்கிக்கொடுத்திருந்தார்கள். கல்லுரிக்குச் சென்ற மகனுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது . இந்தப் புதிய மோட்டார் சைக்கிள் , போலீஸிடம் மாத்திரம் இருந்தது.. இந்தப்  புதிய வாகனத்தைக்  கண்ட அவனது வாலிப நண்பன் , வாகனத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைந்ததுடன் . அந்த வாகனத்தை ஓட்ட ஆசையாயிருந்தான் . அதினால் நண்பனிடம் நான் இந்த வாகனத்தில் ஒருமுறை ஒரு சுற்று சென்று வரட்டுமா என்றான் . அதற்கு சரி என்றான். நீயும் வா என்றான் . ஆனால் ஒரு ஹெல்மெட்தான்  இருந்தது . ஆகவே அந்த நண்பனிடம் அந்த ஹெல்மெட்டைக் கொடுத்து நீ மாத்திரம் போய் வா என்றான். அந்தப் புதிய வாகனத்தின் திறமையை அறியாத நண்பன், மற்ற மோட்டார் சைக்கிளைப் போல் , ஸ்டார்ட் ஆனவுடன் வேகமாய்ச் செல்ல வாகனத்தில்  அமர்ந்து முயற்சித்தான். வாகனமோ அதிக வேகமாய், கட்டுப்படுத்த முடியாதபடி விரைந்தது .அருகில் எதிரில் இருந்த மின்சாரக் கம்பத்தில் மோதியது. அந்த வாலிப நண்பன் அதே இடத்தில் மரித்துப் போனான்.ஒரு ஊழியரின் மூலமாய் எச்சரிக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் சொந்தக்காரன் தன் நண்பன் இறந்ததினால் துக்கமடைந்தான் . தன் ஜீவனை தீங்குக்கு விலக்கின கர்த்தரின் அன்பை உணர ஆரம்பித்தான்.

                  இவ்வாண்டில் பிரவேசித்துள்ள அருமையான தேவப்பிள்ளையே , கர்த்தர் நம்மைக் கண்மணிபோல் காப்பதுடன் எல்லாத் தீங்குக்கும் அதிசயமாய் நம்மை விலகிக் காப்பார் . ' ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும் பகலும் காத்துக்கொள்வேன். ' என்று ஏசாயா 27:3-ல் சொன்ன கர்த்தரின் வாக்கின்படி இவ்வாண்டில் வரும் எல்லாவிதமான தீங்குக்கும் சோதனைக்கும் , துக்கங்களுக்கும் , வேதனைக்கும் விலக்கி , கர்த்தர் நம்மை கண்மணிப் போல் காப்பார் . கலங்க வேண்டாம்.

                                             கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.