"...உன் நம்பிக்கை வீண்போகாது."

                                                                                                                           நீதிமொழிகள் 23:18

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

              கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

              ஒரு முறை வெளிநாடு ஒன்றில் ஊழியம் செய்து கொண்டிருந்த போது, புறமதத்தைச் சார்ந்த ஒரு சகோதரி இயேசு கிறிஸ்துவை தன்னுடைய இரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள். அத்துடன் அவர்களுடைய மூத்த மகனும் கர்த்தரை இரட்சகராக ஏற்றுக்கொள்ள கர்த்தர் கிருபை புரிந்தார். அந்தச் சகோதரிக்கு தனது இளைய மகனும் இயேசு கிறிஸ்துவை தன் ஆண்டவராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஜெபிக்க அழைத்து வந்தார்கள். அந்த இளைய மகனோ என்ன, என்னை இவரைப் பார்க்கவா, அழைத்து வந்தீர்கள் என்று மிகுந்த கோபத்தோடு தாயிடம் கேள்வி கேட்டான். பயந்து ஒதுங்கி இருந்த அந்த சகோதரி, நான் அவரோடு பேசினால் சரியாகும் என்று எண்ணி உள்ளத்தில் ஜெபிக்க ஆரம்பித்தார்கள். அந்த மகனைப் பார்த்து, ஹலோ என்று சொல்லி பேச ஆரம்பித்தபோது, மிகுந்த கோபத்துடன் காணப்பட்டார். கர்த்தர் அந்த இடத்தில் ஒரு காரியத்தை வெளிப்படுத்தினார். உங்கள் உள்ளங்கையில் அடிக்கடி வியர்த்து கஷ்டப்படுகிறீர்களே என்று சொன்னபோது, அவரில் இருந்த கோபம் தணிந்து நான் என்ன சொல்லுவேன் என்று எதிர்நோக்கினார். மேலும் உங்கள் கனவுகளிலே அடிக்கடி வருகிற சர்ப்பம் உங்களைப் பயப்படுத்துகிறது என்றேன். ஆமாம் என்று கூறினார். உங்களுக்காக ஒரு வேண்டுதல் செய்யவா என்று கேட்டேன். சரி என்று தலையை அசைத்தார். மிகுந்த பாரத்துடன் ஜெபித்த ஜெபத்தைக் கர்த்தர் கேட்டு அவரது வாழ்க்கையை இயேசு கிறிஸ்து மாற்றினார். இன்றைக்கு ஒரு திருச்சபையில் கர்த்தரை ஆராதிக்கிற தேவ மனிதராக மாற்றினார். இன்று அவர் வழக்கறிஞராகவும், கர்த்தரை ஆராதிக்கிறவராகவும் கர்த்தர் அவரை மாற்றி உள்ளார்.

              அன்பு சகோதரனே, சகோதரியே, என் பிள்ளை இரட்சிக்கப்படவில்லை, என் குடும்பத்தார் இரட்சிக்கப்படவில்லை என்று கலங்க வேண்டாம். கர்த்தர் மேல் நம்பிக்கை கொண்டு கர்த்தருடைய பிள்ளைகளோடு ஐக்கியப்படும் போது மாற்றம் வருவதோடு, அவர்கள் கர்த்தருக்கென்று வாழ்வதைக் காண முடியும்.

              கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                                                                                                                                                    சகோ. C. எபனேசர் பால்.