வீடு கட்ட/ வாங்க / விற்க உள்ள தடைகள் நீங்க ஒரு ஜெபம்

             அன்பின் தேவனே, இந்த ஜெப நேரத்திற்க்காக உம்மைத் துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். இம்மட்டும் என் காரியங்களுக்காக ஏறெடுத்த ஜெபத்தைக் கேட்டு, அற்புதமாக என் காரியங்களை வாய்க்கச் செய்த தேவனே, உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். இப்பொழுதும் நான் ஒரு வீட்டை வாங்க/ கட்டத் திட்டமிட்டிருப்பதை நீர் அறிவீர். என் காரியத்தை இது வரை தடையின்றி தாமதமின்றி நலமான விதத்தில் செய்ய உதவிய கர்த்தாவே, உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். இந்தக் காரியத்தையும் எனக்குத் துரிதமாக வாய்க்கச் செய்யும். அன்று ஈசாக்குக்கு வாழ ஒரு இடத்தை உண்டாக்கினீரே, அதேபோல் உம் வார்த்தைப் படி எல்லாவற்றையும் செய்ய எனக்கு உதவிச் செய்யும். நான் உம்மால் ஆசீர்வதிக்கப்பட்ட ஆலயத்தில் உம்மைத் தொழுது சேவிக்கிறேன். அந்த ஆலயத்தின் காரியங்களில் கரிசனையுடையவன் என்பதையும்  நீர் அறிவீர். தாவீதின் ஆலய விருப்பத்தைக் கனப்படுத்தி அவனுக்கு வீட்டைத் தந்தவரே எனக்கும் அவ்வாறே ஒரு வீட்டைத் தாரும். அத்துடன் நான் கட்டின என் வீட்டை விற்க எனக்கு உதவிச் செய்யும். கர்த்தாவே, நான் என் திட்டப்படி எனக்கு சொந்தமான இந்த வீட்டை விற்று அல்லது இடித்து புதிதாய் கட்ட எனக்கு உதவிச் செய்யும். இவைகளில் உள்ள தடையினால் நான் அதிகமாக கலங்குகிறேன். இப்படி செய்யலாமா, அப்படி செய்யலாமா, என்ற எண்ணங்கள், என் மற்ற வேலைகளைச் செய்ய முடியாதபடி தடைகளையும், குழப்பத்தையும் உண்டாக்குகிறது. என் இயேசுவே எனக்கு இரங்கும். நான் எதை எப்படிச் செய்வது என்று என்னைப் போதித்து நடத்தும் கர்த்தாவே. வீடு கட்ட / வாங்க / விற்க முயற்சிக்கும் காரியத்தில் உள்ள தடைகளை நீக்கும். நான் நலமான விதத்தில் என் காரியங்களைச் செய்ய எனக்கு உதவிச் செய்யும். இயேசு கிறிஸ்துவே, இவைகளை நான் செய்யும் போது எந்த பொருளாதாரத் தடையும், குறைவும் காணப்படாதபடி என்னை ஆசீர்வதியும். நான் உம்மைத்தான் முன்வைத்து இந்த காரியங்களைச் செய்கிறேன், என்னை ஆசீர்வதியும். என் குடும்ப வாழ்க்கையை மேன்மையாக்கும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.