சிந்தி செயல்படு

'....எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.'    மத்தேயு 10:19

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ,

                     கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்.

                      ஒரு முறை ஒரு ஊழியக்காரர் தன் அனுபவத்தின் ஒரு பகுதியைப் பகிர்ந்து கொண்டு , தேவன் செய்த நன்மையை எண்ணி துதிக்க ஆரம்பித்தார் . அந்த ஊழியக்காரர் ஒரு சகோதரிக்காக ஜெபித்த நேரத்திலே    அந்தச் சகோதரி இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டாள் . புறமதஸ்தராயிருந்தபடியினாலே அந்த சகோதரியானவள் தன் குடும்பத்தார் மூலமாய் அதிகமாய் நெருக்கத்திற்குள்ளானார்கள். அந்த ஊழியக்காரர் மீண்டும் அந்த மகளை ஆறுதல்படுத்தி காரியங்களை     நன்கு போதித்தபொழுது, அந்த சகோதரி ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பித்தாள் . தன்னுடைய இளைய மகன் அதிகமாக வைராக்கியமாய் வாழ்ந்து கொண்டிருந்த மகன். இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வேண்டும், அப்பொழுது சகலமும் சமாதானமாய் இருக்கும் என்று எண்ணி, அந்த ஊழியக்காரரை வரவழைத்ததோடு அந்த ஊழியக்காரர் பயணம் செய்த அதே காரிலே மகனையும் அழைத்துச் சென்றார்.ஒரு குறிப்பிட்ட இடத்திலே அந்தக் காரை நிறுத்திவிட்டு ஏதோ ஒரு காரியத்தைத் தான் செய்யப்போவது போல   இறங்கிப் போய்விட்டாள். அந்த ஊழியக்காரருக்கு என்ன செய்வது , எவ்விதமாய் அந்த மனிதரோடு பேசுவது என்று தெரியாத வேளையில் கவலையோடு இருந்தபோது, கர்த்தர் அவருக்குள் சொன்ன வார்த்தைகளைச்  சொன்னாராம். உங்களுடைய உள்ளங்கைகளில் வேர்க்கிறதல்லவா? என்றார், அந்த மனிதன் மிகுந்த கோபத்தோடு ஆமாம் என்று கூறினாராம். அத்தோடு நில்லாதபடி அந்த ஊழியக்காரர் அந்த வாலிபனைப் பார்த்து அடிக்கடி உங்களுடைய கனவுகளிலும், நினைவுகளிலும் ஒரு பாம்பு படம் பிடித்து உங்களுக்கு முன்பாய் வருவதுபோல்  இருக்கிறதே என்று ஒரு காரியத்தைச் சொன்னவுடனே அந்த சகோதரனுடைய உள்ளமானது உடைய ஆரம்பித்தது. அப்பொழுது இது நீங்குவதற்கு ஒரு பிராத்தனை செய்யவா என்று கேட்டவுடனே சரி என்றவுடனே அந்த மகனுக்காய் ஜெபித்தார். தேவன் அற்புதம் செய்தார் . அந்த வாலிபன் அந்த நாளிலே இயேசு கிறிஸ்துவை தன் ஆண்டவராக ஏற்றுக் கொண்டான்.

                         ஆம், கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே , நெருக்கமான வேளையிலே எப்படி நான் பேசுவேன், எதை நான் பேசுவேன் என்று கலங்குகிற மனிதனாய் அல்ல , கல்வாரியிலே நமக்காக யாவையும் செய்து முடித்த இயேசுகிறிஸ்து , நமக்கு வேண்டிய ஞானத்தை, வார்த்தைகளை நமக்குத் தந்து, அவைகளின் வழியாக ஆத்தும ஆதாயத்தை நடப்பிக்கிறவராயிருக்கிறார். ஆகவே ஊழியங்களைச் செய்கிற அருமையான தேவப்பிள்ளையே , சகோதரியே , உன் ஊழியம் சிறப்படைய தேவனுடைய வார்த்தைகள் உங்களுக்குள் பெருகுவதற்கு இடம் கொடுங்கள். அந்த ஊழியரைப் போல என்னத்தைப் பேசுவோம் என்று கவலைப்படாதபடி கவலைகளை எல்லாம் நீக்குகிற தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். கவலைகளை நீக்கி கலங்காது வாழவும், அவரைச் சேவிக்கவும் அவருடைய பணியைச் செய்யவும், நம்மை நடத்துகிற தேவன் இருக்கிறபடியினால் நாம் துதித்து சோர்ந்து போகாதபடி உற்சாகத்தோடு செயல்படுவோம். கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக.

            கர்த்தரின் ஆசீர்வாதம் நம்மோடிருப்பதாக.