தடைகள் எல்லாம் நீங்க ஒரு ஜெபம்

       அன்பின் தேவனே, இந்த ஜெபவேளைக்காக நன்றி கூறுகிறேன். இம்மட்டும் என்னைக்காத்துவருகிறபடியால்ஸ்தோத்திரம்.கர்த்தாவே,என் வாழ்வில் பலவித தடைகளை சந்தித்து வருகிறேன்.என் தடைகளை எல்லாம் நீர் ஒருவரே நீக்க வல்லவர் என்று உம் பாதத்தில்தாழ்த்தி துதிக்கிறேன்.ஏன் இந்த தடைகளும், தாமதங்களும் என்று எண்ணுகிறபோது, ஒன்றும் புரிந்து கொள்ளமுடியவில்லை.என் திருமணவாழ்வு தடையும், தாமதமும் ஆகிறது,என்னுடைய வேலை கிடைப்பதில் தடையும், தாமதமும் ஏன் என்று கலங்குகிறேன்.எனக்கு பிள்ளை கிடைப்பதில் ஏன் தடையும்,தாமதமும் என்று சோர்வடைகிறேன். என் வீடு கட்டுவதில் ஏன் தடைகள் என்று கலங்குகிறேன்.உமக்குச் சித்தமில்லாத காரியத்தை நான் செய்கிறேனோ என்ற எண்ணமும் என் உள்ளத்தை வாட்டுகிறது.இயேசு கிறிஸ்துவே,எனக்கு இரங்கும்.இனி என் காரியங்கள் எதுவும் தடையாகாது வாய்க்கச்செய்யும்.என் விருப்பங்களும் வாஞ்சைகளும் உமக்குத் தெரியும்.அதை தடையின்றி வாய்க்கச்செய்யும். கர்த்தாவே,ஒரு போதும் கைவிடாத அன்பின் தேவனே,எனக்கு இரங்கும் அதினதின் காலத்தில் நிறைவாக நேர்த்தியாக எல்லாவற்றையும் செய்கிற கர்த்தாவே,எனக்கு இரங்கும். எதைச்செய்தாலும் தடை என்ற நிலைமை மாறிவிட கெஞ்சுகிறேன். கர்த்தாவே, நீர் ஒருவரே என் தடைகளை நீக்கும் அதிகாரமும், வல்லமையும் உடையவர்.எனக்கு இரங்கி,எல்லாத் தடைகளும் நீங்கி ஆசீர்வதிக்கப்பட உதவிச்செய்யும்.துரிதமாய் தடை நீங்கி ஆசீர்வதிக்கப்பட நான் ஒரு சாட்சியாக மாற எனக்கு உதவிச்செய்யும். இன்னும் கர்த்தாவே, நான் முயற்சிக்கிற கடையை, வீட்டை, தடைகள் நீங்கி வாங்க உதவிச்செய்யும்.கர்த்தாவே,எனக்கு இரங்கும்.என் தொழிலை ஆசீர்வதியும்.சில சமயத்தில் தடை தாமதங்களினால்,எனக்கு விரோதமாக ஏதாவது வஞ்சகமாக சூனியங்களை செய்திருப்பார்களோ என்ற எண்ணங்களும் மிகுதியாக என்னில் தோன்றுகிறது. நீர் சர்வ அதிகாரம் உடையவர்.'உனக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும்'என்ற வார்த்தைப்படி எனக்கு இரங்கி என் வாழ்வில் உள்ள தடைகள் எல்லாம் நீங்கி,நான் ஆசீர்வதிக்கப்பட எனக்கு உதவிச் செய்யும். அதைச் செய்வீர் என்று உம்மைத் துதிக்கிறேன். ஸ்தோத்திரிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால்வேண்டுகிறேன் பிதாவே. ஆமென்.