ஜெபம்

                                                                         கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்ய ஒரு ஜெபம்

அன்பின் தேவனே, இந்த ஜெபவேளைக்காக உமக்கு நன்று கூறுகிறேன். நீர் ஜெபத்தைக் கேட்கிற தேவன், அத்துடன் நான் என்ன செய்ய வேண்டும் என்று என் ஜெபத்திற்குப் பதில் தருகிற தேவாதி தேவனாக இருப்பதால் உம்மைத் துதிக்கிறேன். ஸ்தோத்தரிக்கிறேன். கர்த்தாவே, என் அனுதின வாழ்க்கையின் செய்கையில், நான் உமக்குப் பிரியமானதையே செய்ய விரும்புகிறேன். முதலாவது உமக்குப் பிரியமானதை என் சிந்தையிலே இருக்க விரும்புகிறேன். என் சிந்தையில் கர்த்தாவே, பழைய வாழ்வின் பாவங்களும், செய்கைகளும் நினைவிற்கு வந்து என்னைத் துக்கப்படுத்துகிறது. என் இளவயதின் பாவங்கள் என் நிளைவுகளில் பெருகிவிடுகிறது. அது என் உள்ளத்தில் நான் எவ்வளவு கேடானவைகளைச் செய்திருக்கிறேன் என்று என்னைக் குற்றப்படுத்துகிறது. நீ பரலோகம் செல்ல முடியாது என்ற பிசாசின் தந்திர வார்த்தைகள், மனச் சோர்வையுண்டாக்குகிறது. ஐயோ, நான் இனி என்ன செய்வேன் என்ற மனச்சோர்வை பெருகச் செய்து விடுகிறது. இயேசு கிறிஸ்துவே எனக்கு இரங்கும். முந்தினவைகளை நினைக்க வேண்டாம். பூர்வமானவைகளைச் சிந்திக்க வேண்டாம் என்று நீர் சொன்ன வார்த்தைப்படி என் சிந்தைகள் சீர்ப்படுத்தப்படுவதாக, கர்த்தாவே, என் கண்ணின் பார்வை இன்று முதல் நீர் விரும்புகிற. நலமான உம் காரியங்களைக் காணட்டும். நான் காண்கிற காரியத்தினால் உம்மைப் பிரியப்படுத்தவே விரும்புகிறேன். மனதில் இச்சைகளையும், அருவருப்பானவைகளையும் நான் காண்கிற காரியத்தினால் என்னை அசுசிப்படுத்தாதபடி என்னை இன்று முதல் காத்து நடத்தும் என் வாயின் வார்த்தைகள், நீர் எனக்குப் பாராட்டிய இரக்கங்களுக்காக நன்றி கூறுகிறதாய் மாறட்டும் வீண் வார்த்தைகளை நான் இனிப் பேசாதபடி என் வாய்க்குக் காவல் வையும். என் செவிகள் உம்முடைய மகிமையான காரியங்களையே கேட்கட்டும். வீண் வார்த்தை, பரிகாச வார்த்தை கெட்ட வார்த்தைகளுக்கு விலக்கிக் காத்தருளும் மற்றவர்களின் குற்றத்தைப் பொய்யாய் பேசிக்கொண்டிருக்கிற மக்களுக்கு என்னை விலக்கி உம்மைப் புகழுகிற மக்களுடன் இணைந்து, உம்மையே புகழ என்னை நடத்தும் இனி ஒவ்வொரு நாளும் வேத வாக்கியங்களைத் தியானித்து, உமது வல்லமையான செய்கைகளை அறிந்து, சாட்சியாய்ப் பறைசாற்ற என்னைக் கருவியாக மாற்றும். கர்த்தாவே, நானும் என் வீட்டாருமோவென்றால் உம்மையே இன்றும் என்றும் சேவிக்க, என் வீட்டார் அனைவரின் மனதையும் ஒருமுகப்படுத்தும். நீர் அவ்வாறு செய்வீர் என்று உம்மைத் துதிக்கிறேன். ஸ்தோத்தரிக்கிறேன். என் ஜெபம் கேளும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டுகிறேன் பிதாவே, ஆமென்.


E- STORE