சிந்தி செயல்படு

                                                     "...காணமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான்.

                                                           அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்."

                                                                                                                                                                   லூக்கா 15:24

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன். இந்தப் புதிய ஆண்டுக்குள் பிரவேசித்த நம்மைக் கர்த்தர் பன்மடங்காக ஆசீர்வதிப்பாராக.

ஒரு முறை பிரையன் என்ற சகோதரர், திருச்சி அருகே உள்ள பஞ்சப்பூர் என்ற இடத்திலிருந்து, ஏற்கனவே எனக்கு அறிமுகமான ஈயன் என்ற சகோதரரோடு ஒரு குஷ்டரோக குடும்பத்திற்காக ஜெபிக்க வந்தார்கள். இந்தப் பிரையன் என்ற சகோதரர் வாழும் இடத்தருகில், குஷ்டரோகிகளின் குடும்பங்கள் வாழும் காலனி உள்ளது. பிரையன் என்ற சகோதரர், இந்தக் குடும்பத்தாரைச் சந்தித்து வந்தார்கள். அவர்களுக்கு கிறிஸ்து இயேசுவைப்பற்றியும் தெரிவித்து வந்தார்கள். ஒரு நாளில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சகோதரி, இந்த சகோதரரிடம் அழுது கொண்டே வந்தார்கள். இவர்களுக்கு இரண்டு ஆண்குழந்தைகள் இருந்தனர். அழுது கொண்டு வந்த சகோதரி, என் இரண்டாவது மகனைக் காணவில்லை. யாரோ கடத்திச் சென்று விட்டார்கள் என்று கூறினார்களாம். ஜெபிக்க வந்த அவர்களைப் பார்த்து நீங்கள் கவலைப்படாதீர்கள் என்றேன். அவரிடம் மூன்று தினங்கள் கழித்து இந்தக் குடும்பத்தை ஜெபிக்க அழைத்து வாருங்கள் என்றும், காணாமற்போன குழந்தை கிடைத்துவிடும் என்றும் கூறி அனுப்பி விட்டேன். மூன்று நாள் கழித்து குழந்தையின் பெற்றோர்கள் வந்தார்கள். இன்னும் பிள்ளை கிடைக்கவில்லை என்று கலங்கினார்கள். நான் அவர்களுக்காக ஜெபித்தபோது ஒரு பெரிய சர்ப்பம் அவர்களை விட்டு விலகியதைக் கண்டேன். நீங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள். உங்கள் பிள்ளையைக் குறித்த போன் செய்தி கிடைக்கும் என்று அனுப்பி வைத்தேன். அவர்கள் வீடு சென்றபோது, காணாமற்போன சிறுவன் கிடைத்துவிட்டான் என்ற செய்தியைக் கேட்டார்கள். அவர்களின் வாழ்வில் சந்தோஷமும், மகிழ்ச்சியும் பெருகிற்று.

அருமையான சகோதரனே, சகோதரியே புதிய ஆண்டுக்குள் பிரவேசிக்கச் செய்த கர்த்தரைத் துதியுங்கள். அவரைத் தேடுகிறவர்களை அவர் கைவிடமாட்டார். சென்ற ஆண்டில் நீங்கள் எதை, எதை இழந்தீர்களோ அதையெல்லாம் கர்த்தரின் பெரிதான கிருபையால் இந்த ஆண்டில் பெற்று கர்த்தருக்குள் மகிழ்வீர்கள். எப்படி தாவீது சிக்லாகு என்ற இடத்தில் அமலேக்கியர் பிடித்துக் கொண்டு சென்ற மனைவி, பிள்ளைகள், ஆடு, மாடுகள் எல்லாவற்றையும், ஒன்றும் குறைவுபடாமல் திருப்பிக் கொண்டதுபோல, இந்த ஆண்டில் உங்களின் சகல உடைமைகளையும் திருப்பிக் கொள்ளுவீர்கள். அது உங்கள் வீடாக, நகையாக இருந்தாலும், அதைப் பெற்று மகிழ்வீர்கள். தடையான ஆசீர்வாதங்களை இந்த ஆண்டில் சீக்கிரமாகப் பெறுவீர்கள். வேலை/ திருமணம் /குழந்தை போன்ற சகல மேன்மைகளைப் பெற்றுக்கொள்ளுவீர்கள்.'.தேவனுக்குக் கீழ்படிந்திருஓடிப்போக்கு நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்'என்ற யாக்கோபு 4:7 என்ற வார்த்தை நிறைவேறும். '...காணாமற்போன வெள்ளிக்காசை கண்டுபிடித்தேன், என்னோடுகூடச் சந்தோஷப் படுங்கள்...' என்ற ாக்கா 15:9 ன் படி சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும். சகல நோயும், பெலவீனமும் மாறிப்போகும். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

 

சகோ. C. எபனேசர் பால்.


E- STORE